பக்கம்:எழில் விருத்தம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 வாணிதாசன் B.I. தேர்வில் வெற்றி பெற்றேன். இதற்காகப் பெரிதும் மகிழ்வடைந்தவர்கள் இருவர். ஒருவர் திரு முடி நடராச செட்டியார். மற்றொருவர் எனதா சான் கவியரசர் பாரதிதாசன். இவர்களை என்றும் என்னால் மறக்க முடியாது. நான் மீண்டும் பிரெஞ்சுப் பட்டதாரியாவதற்கு அக்கல்லூரியிலேயே படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் எனக்கேனோ தமிழில் ஏற்பட்ட ஈடுபாடு பிரெஞ்சு மொழியில் ஏற்படவில்லை. வாழ்வும் பணியும் 1935 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் என் தங்கை ஆண்டாளின் நன்மைக்காகவும் சிற்றன்னை செல்லம்மாள் அவர்களின் விடாப்பிடித் துண்டுதலுக்கும் ஆட்பட்டு ஆதிலட்சுமி என்ற உறவுக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன். என் தங்கைக்கும் எனக்கும் ஒரே நாளில் சேலியமேட்டில் திருமணம் நடந்தது. என் மனைவி சிற்றுார் எழுதத் தெரியாதாள் பொன்னைப் பொருளை ១ឍសTទ័រ புகழறியாள் அன்னாளின் ஊக்கம் எனக்கூக்கம் ஆகிடுமோ பின்னாள் செயலெதுவோ பேச்செடுக்க வேண்டாம்! இரண்டாண்டுகள் வேலை கிடைக்காமல் தந்தையின் உழைப்பில் உண்டு ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன். அந்நாளில் எதை மறந்தாலும் தமிழ் இலக்கண இலக்கியத் தொடர்பை மறவாமல் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தேன். பாரதிதாசன் பாடல் என்றால் எனக்கு உயிர். அவர் கவிதை நூல்கள் ஒவ்வொன்றையும் பன்முறை படித்து மகிழ்வேன். ' '. 1937 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 15ஆம் தேதி தற்காலிகத் தமிழாசிரியர் பதவியை முன்னாள் புதுவை