பக்கம்:எழில் விருத்தம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 02 வாணிதாசன் மணமக்களை வாழ்த்துவேன். என் தமிழறிவைக் கேட்டுப் பாவேந்தர் பூரித்துப் போவார். திருமண விருந்தில் அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ளச் சொல்வார். என்மீது அவருக்கு அவ்வளவு பரிவு உண்டு. அவர் நடத்திய திருமணங்களில் நான் கலந்து கொள்ளாததே கிடையாது. அடிக்கடி அவர் வீட்டுக்குச் செல்வேன். நான் எழுதும் பாடல்களைக் காட்டுவேன். சில திருத்தங்கள் செய்து தருவார். அவர் திருத்திய படிகளை இன்றும் நான் உயிரினும் மேலாகப் போற்றி வருகிறேன். பாவேந்தர் ஒருமுறை "உனக்கு எளிய முறையில் எழுத வருகிறது. ஆனால் நடை படியவில்லை. என் கவிதைகளைப் படித்து வா என்று கூறினார். அன்று அவர் கூறியது இன்றும் எவ்வளவோ பயனுடையதாகவே தெரிகிறது. மறைந்த பாவேந்தர் என்னிடம் நேரில் சொல்லாமல் மற்றவரிடம் என்னைப் பலப்பல பாராட்டி எனக்கு ஆர்வமூட்டி வந்தார். j ஒன்றரை ஆண்டுக்குப்பின் அதவாது 1944ஆம் ஆண்டு காரைக்காலுக்கு மாற்றப்பட்டேன். என்னோடு ஆசிரியர் சிவ. கண்ணப்பா அவர்களும் மாற்றப்பட்டார். இங்கு ஒன்றை நான் அவசியம் குறிப்பிட்டாக வேண்டும். அவர் தந்தை சிவகுருநாதன் புதுவை இலப்போர்த் பெண்கள் பாடசாலையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வந்தார். பாடசாலை நூலகத்திலிருந்து சங்க கால இலக்கண இலக்கிய நூல்களை அவர் வாயிலாகப் பெற்று தமிழறிவை வளர்த்துக் கொண்டேயிருந்தேன். காரைக்காலில் பல இலக்கிய நிகழ்ச்சிகளில் பல தமிழறிஞர்களோடு நானும் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவேன். கற்றறிந்த அறிஞரோடு நாமும் கலந்து