பக்கம்:எழில் விருத்தம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} ()4 வாணிதர்சன் 1945 ஆம் ஆண்டு பாகூர்ப் பாடசாலைக்குக் காரைக்காலிலிருந்து மாற்றப்பட்டேன். என்னுள் தமிழ்ப் பட்டதாரியாக ஆக வேண்டும் என்ற எண்ண மும் தொடர்ந்து வளர்ந்து கொண்டேயிருந்தது. தமிழாசிரியராகப் Lisofluislišāméo Qg5m Läägil Entrance, Preliminary, Final so,élu தேர்வுகளை எழுதலாம் என்பதோடு கல்லூரியில் பயிலாமல் வீட்டில் பயின்றே தேர்வெழுதலாம் என்ற சலுகையும் இருந்தது. நான் ஒரே மூச்சில் இரவோடு இரவாகக் கண் விழித்து பயின்று ஆண்டிற்கு ஒரு தேர்வு என எழுதி 1948 ஆம் ஆண்டு வித்து வான் பட்டம் பெற்றேன். அன்றிருந்த பிரெஞ்சு அரசாங்கம் வித்துவான் பட்டம் பெற்ற தமிழாசிரியர்கட்கு ரூபாய் 10 ஊதியத்தோடு கூட்டிக் கொடுத்தும் வந்தது. பட்டதாரியானது, ரூபாய் பத்து கூடுதல் ஊதியம் பெற்றது ஆகிய இரட்டைப் பயனை அத்தேர்வில் நான் பெற்றேன். நான் வித்துவான் பட்டதாரி என்ற காரணத்தாலும் பிரெஞ்சு மொழி கற்றுள்ளேன் என்ற காரணத்தாலும் நான் பயின்ற கல்வே கல்லூரிக்கே 1948ஆம் ஆண்டு தமிழ்ப் பேராசிரியராக மாற்றப்பட்டேன். அங்கே நான் கிட்டத்தட்ட மூன்றாண்டுக் காலம் என்னை இன்றுள்ள கவிஞன் நிலைக்கு மேம்படுத்திய பொற்காலமாகும். அந்த மூன்றாண்டுக் காலத்தில் கருத்து வேற்றுமையால் நான் பல தொல்லைகள் அடைந்தாலும் முன்னேற்றம் அடைந்ததே அதிகமென்பேன். - பின்னர் நான் பல ஊர்களுக்கு மாற்றலாகி ஆசிரியப் பணி புரிந்தேன் என்றாலும் எங்கும் மனைவி மக்களை அழைத்துக்கொண்டு போய்க் குடும்பம் நடத்தியதில்லை. என் தந்தை அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்று, சொந்த வில்லியனுர் வீட்டை இழந்து முடக் குவாத நோயோடு சேலியமேட்டிற்கே குடி பெயர்ந்தார். -