பக்கம்:எழில் விருத்தம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் 1 ().5 எனக்குத் தாயூ ரும் பாட்டியூரும் சேலிய மேடே ஆகும். அவ் ஆரிலேயே என் இளமைக் காலத்தைக் கழித்தேன். அங்கே நான் ஒரு குடிசை வீட்டை விலை பேசி வாங்கிக் குடும்பம் நடத்தி வந்தேன். வழக்கம் போலவே புதுவையிலுள்ள உணவு விடுதியிலேயே உண்டு பணி புரிந்து வந்தேன். விடுமுறை நாட்களில் சேலியமேடு வந்து போவேன். கல்லூரி ஓய்வு நேரங்களில் பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன் (கோபதி) நடத்தி வந்த கடையிலும் பாவேந்தர் வீட்டிலுமே பொழுதுபோக்குவேன். அந்த நாட்களெல்லாம் எனக்கு எவ்வளவோ பயனுள்ள நாட்களாக இருந்தன. நினைத்துப் பார்க்கின் அந்த நாட்கள் தான் என் தமிழறிவையும் கவிதையாக்கும் திறனையும் வளர்த்தன என்று கூறவேண்டும். அதற்குப் பெருந்துணை புரிந்தவர் என தாசான் கவியரசர் பாரதிதாசனே யாவார். o 28-5-1950 இல் கோயமுத்துரில் பெத்தாம் பாளையம் பழனிசாமி பலர் கூட்டுறவோடு முத்தமிழ் மாநாடு மூன்று நாட்கள் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். அந் நிகழ்ச்சியில் மறைந்த நாவலர் சோமசுந்தர பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம், கே.ஆர்.இராமசாமி போன்றோர் கலந்து கொண்டனர். இரவில் ஒவ்வொரு நாளும் நாடகம் நடைபெறும். கழகத் தோழர்களும் தலைவர்களும் பங்கேற்று நாடகம் நடத்தினர். ஒவ்வொரு நாடகத்திலும் அறிஞர் அண்ணா பங்கேற்று நடித்த வேடத்தை நினைத்துப் பார்க்கின் அண்ணாவின் ஒப்பனையும் (வேடப் பொருத்தம்) நடிப்பும் என் மனதில் பசுமரத்தாணி யெனப் பதிந்துவிட்டன.