பக்கம்:எழில் விருத்தம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 வாணிதாசன் மாமல்லையைச் சுற்றிப் பார்க்கப் பார்க்கப் பல விசித்திரமான எண்ணங்கள் தோன்றின. பல அறை குறைச் சிற்பங்களின் காரணம் என்னவாக இருக்கக் கூடும் என்ற வினா என்னுள் எழுந்தது. அதன் விளைவே நான் எழுதிய 'கொடிமுல்லை' என்ற கவிதை நூலாகும். உழைக்கின்ற அரிசனங்கள் வாழ்கின்ற சேரி பெரும் பாலும் சிற்றுரர்களை யொட்டியே இருப்பன்தக் காணலாம். நான் சேலியமேடு என்கின்ற சிற்றுாரில் என் இளமைக் காலத்தைக் கழித்தவனாகையால் விளையாட்டாகச் சேரிக்கு அடிக்கடி போவேன். அவர்கள் வாழ்க்கை முறையைக் கண்டு பல முறை வாடியதுண்டு. நினைத்துப் பார்க்கின் இன்றுகூட அவர்கள் நிலை மேம்பாடடைந்ததாக எனக்குத் தோன்றவில்லை. அவர்கள் நிலையினை எண்ணியெண்ணி அவர்கள் நிலை உயரவேண்டுமென்ற வேட்கையால் எழுந்ததே 'தமிழச்சி' எனும் நூல். தமிழச்சி, கொடிமுல்லை ஆகிய இரு கவிதை நூல்களும் தான் வித்துவான் தேர்வு எழுதும் முன்னரே எழுதப் பட்டவையாகும். இவ்விரு நூல்களையும் வெளியிடுமாறு பல பதிப்பகங்கள் ஏறியேறி எனக்கும் என் அருமை நண்பர்களுக்கும் கால்கள் அலுத்துவிட்டன. நினைத்துப் பார்க்கின் அன்று நான் மக்களிடையே அதிக விளம்பரம் ஆகாத கவிஞன். பதிப்பகத்தார் வரவு செலவு பார்க்கின்ற பண்பாளர்கள். என் நூலை வெளியிட அவர்கள் தயங்கியதில் புதுமையில்லை. - ‘. . . . . . என் நூலை வெளியிடச் செய்யும் முயற்சியில் நான் தளரவில்லை. தொடர்ந்து பதிப்பகப் படிகள் ஏறிக் கொண்டிருந்தேன். இறுதியாக நான் தொடர்ந்து எழுதி வந்த புதுக்கோட்டைப் பொன்னியின் ஆசிரியர் முருகு சுப்பிரமணியன் (இன்று இவர் மலேசியா தமிழ் நேசன்