பக்கம்:எழில் விருத்தம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் || 3 இதுபோன்ற கவிதைச் சொற்றொடர்களைக் கேட்ட போதெல்லாம் தலைவர் சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியாரவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். கவிஞர் வாணிதாசன் தமிழ் வெறியில் பாடுகிறார் எனப் பாராட்டினார்கள். நினைத்துப் பார்க்கின் நான் ஒன்பது கவியரங்கங் கட்குத் தலைமை ஏற்றுள்ளேன். சென்னையில் பூம்புகார்த் திடலில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. கவியரங்கிற்கு நான் தலைமையேற்றேன் என்பது குறிப்பிடத்தக்கது. மாபெரும் மக்கள் வெள்ளத்திடையே "தமிழன்’ என்ற தலைமைக் கவிதையைப் பாடினேன். கிடைத்ததை உண்டே கிடப்பது வாழ்வின் மடத்தனம் என்றே மனதில் நினைத்தான் மனையறம் கண்டான்; மனைக்குறு மாட்சி தனிமகள் கண்டான், தழைத்தது வாழ்க்கை. அறிவைத் துணைக்குப் பலநாள் அழைத்தான் நெறியை உணர்த்தி நெடும்புகழ் நாட்டிக் கடலினைத் தாண்டிக் கயல்புலி வில்லை இடமகல் அண்டையர் நாட்டின் இடையிலும் நட்டான் தமிழன் மெய்ச்சீர்த்தியை நட்டானே! வெற்பைக் குடைந்தெடுத்தே மேன்மை அழகுதரு சிற்பம் படைத்தான் திகழோவியம் அளித்தான் கார்வானை முட்டும் கலைகொழிக்கும் கோபுரமும் தேரும் செழுந்தாது பொற்சிலையும் கண்கவரும் ஊரும் தெருவும் உணவூட்டும் நன்செய்க்கே ஏரியும் தாங்கலும் ஈந்தோன் தமிழனன்றோ? கோட்டையும் பொத்தலமும் கூழக்கே ஏங்காநல் நாட்டையும் கண்டவன் நற்றமிழன் ஆகானோ?