பக்கம்:எழில் விருத்தம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் 25 ஈன்றவள் பிள்ளை காத்தே இருப்பினும் சிறிது போழ்து தோன்றுவாள்; இமையை மூடித் துயின்றுபின் எழுவாள்; நீயோ ஈன்றவள் தனக்கும் தாயாய் இமைநொடி மூடல் இன்றி ஆன்றதை விளக்கி ஊக்கும் அணிநகர்க்(கு) அன்னை ஆனாய்! 6 வீட்டினில் அறிவு மிக்க r மேலவள் மாமி வாழ்ந்தால் வீட்டினில் ஒழுங்கு நேர்மை மிகுந்திடும் என்பர் மேலோர்; கூட்டினில் இருந்து கொண்டே குடியினை ஊக்கி நாளும் ஆட்டிடும் பெரிய மாமி மணிக்கூண்டே ஆனாய்! வாழி! 7 தன்னலம் சிறிதும் எண்ணாத் தகைமையால் உழைக்கும் சான்றோர் மன்னிய புகழைப் போல, - . மணிக்கூண்டே! உன்றன் ஓசை எந்நாளும் நீண்ட தூரம் இருப்பவர் அறிவர்; ஆனால் உன்னைப்போல் மேலோர் எல்லாம் நீண்டநாள் உயிர்த்த துண்டோ? 8