பக்கம்:எழில் விருத்தம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் 39 மாடு கன்றொடு வயல்வெளி பூம்புனல் மலர்மிகு நீள் குன்றம் ஊடு செஞ்சுடர் பொன்னிற மழைபொழி ஒளி குறை கீழ்வானக் - காடு மேவிடும் கதிரவன் கண்டனம் ! கவின் மிகு கதிர் அந்தி ஒடு போழ்தினில் கீழ்த்திசை விளக்குகள் ஒத்தன விண்மீன்கள் ! 6 பந்தி பந்தியாய் நாரைகள் இணையுடன் படுகையைப் போய்ச்சேர அந்தி பூத்திடப் பூத்திடும் வேலியில் அழகொளி பொன்பீர்க்கு! சிந்து பூத்திடச் செவ்வொளி பூத்திடச் சிரித்தது செவ்வானம் ! - வெந்து பூத்திடும் வானிடை முல்லைபோல் விரிந்தன விண்மீன்கள் 7 காயும் போழ்திலும் கடந்திடு போழ்திலும் கதிரொளி நனlநல்கும் பாயும் செவ்வொளி மறைந்திட மறைந்திடு பகலவன் வழிநோக்கித் . தேயும் திங்களும் வழியினைக் கூட்டியே திரும்புவோர் செயல்போலச் -- சாயும் செங்கதிர் போய்விழ நன்றியாம் தண்ணொளி முகம்காட்டும்! 8