பக்கம்:எழில் விருத்தம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் - 47 வாயில் வருபவர் முன்னே வணங்கி வரவேற்கும் கைபோல் சாயல் குறையாக் குளத்துள் தாமரை கூம்பி அழைக்கும்! பாயினை எங்கும் பரப்பி வைத்த மணவறை போலக் காய்கனி பூத்த மலர்கள் கலைவிருந் துட்டும் சோலை! 6 சோலையாம் கோட்டையின் உள்ளே துண்களாம் மாபலா தென்னை! கோல வளைவுகள் கோட்டை கொட்டு முரசார்க்கும் வாயில்! மாலையில் வந்தவர் குந்த வரிசையாய் இட்ட இருக்கை மேலவர் கூடிடத் தென்றல் - வேந்தன் அறம்பயில் சாலை! 7 வெட்டி நறுக்கிய வேலி விரிவில் விளங்கிடு பூக்கள் நட்ட மரகதக் கோட்டை . நடுமதில் ஆடும் கொடிகள்! தொட்டில் விழித்த குழவி தொங்கிச் சிரிப்பதைப் போலச் சட்டி படர்ந்த கொடிப்பூ - தலைமேல் அசைந்திடும் சோலை! 8i