பக்கம்:எழில் விருத்தம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 2 வாணிதாசன் மட்டார் குழலித் தமிழப் பெண்கள் வாட்கண் முகமொக்கும் வட்ட நிலவு கோடி எழுந்து வான வெளிவிட்டே எட்டி யெட்டிக் கடலைப் பார்க்க இறங்கி வந்ததென நட்ட விளக்குச் சுடரைப் பரப்பும் நகரக் கடலோரம் ! - 9 தணலைப் போக்கச் சீறிப் பாய்ந்தே தாவும் அலையோரம் அணிசேர் பெண்டிர் ஆண்கள் சிறுவர் அங்கும் இங்குமென மணலிற் பொங்கும் ஆடல் பாடல் மக்கட் பெருங்காடு தணிய மாலைத் தணியா மாலைத் தருமே கடலோரம் ! 1 O "மாச்சி ஜந்து காய தொன்று' என்னும் விருத்தப் பாவியல் நூற்பாவுக்கு ஏற்ப அமைந்த அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம். -