பக்கம்:எழில் விருத்தம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் S5 தாமரை முகமோ தடங்கயல் விழியோ தாவுசெங் கண் வரால் கையோ மாமரு அல்லி செவ்விதழ் கொஞ்ச வாய்த்தநற் செவ்விதழ் தாமோ காமரு வாழை கால்களோ பூண்ட கைவளை சங்கினம் ஆமோ பூமரு வண்டு விழிநகை மங்கை போன்றனை வாழிநீ ஆறே ! 6 அறிவிலா மக்கள் அணுகிய போதும் அவரவர் கீழ்மையை மாற்றும் அறிவுடை யான்ற மேலவர் போல அணுகிய கழிவுநீர் யாவும் நெறியொடு மாற்றி நீர்மையைத் தேக்கி நின்கரை புதுமையால் விளைந்த பொறியினை இயக்கி மின்விசை நல்கிப் புரந்தனை உலகினை ஆறே ! 7 ஊட்டியே வளர்க்கும் வயல்மிகு சிற்றுர் உயர்மணி நெடுங்கடைப் பேரூர். காட்டினில் ஆடும் பிடியினம் நாணக் கலையிருள் வைகறை தோறும் கூட்டமாய்ப் பெண்கள் குடத்தினை ஏந்திக் குளிர்புனல் ஆடிட வருவர்; நாட்டினில், ஆறே ! நீயிலா ஊர்க்கே . நல்லழ கில்லையென் றாரே ! в