பக்கம்:எழில் விருத்தம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் 63 வயலெல்லாம் பசுங்காடு; பசுங்காட்டின் உச்சி மணிக்குலங்கள் பனித்துளிகள்; காலைதந்த செல்வம்! அயலோடும் வாய்க்காலில் சேலினங்கள் ஏறும்; அடர்நீலம் அரிவையரின் குளிர்விழியைக் காட்டும்; பெயல்தேய்ந்த வானத்து மூடுபனி மூட்டம் பின்பொருளைக் காட்டுகின்ற திரைச்சீலை யொக்கும்; மயலுட்டும் அதிகாலை மதகிடுக்குச் சந்தில் வழிந்துவரும் தண்ணிரும் மனம்குளிரச் செய்யும் 6 குளிர்நிறைந்த ஊரிடையில் சிறுவெப்பம் பாயும்; கூரையின்கீழ் மண்சீய்த்துக் குக்கலினம் தூங்கும்; தளிர்நிறைந்த மரக்காடு சருகுதிர்த்து நிற்கும்; தரையெல்லாம் சிறுபுகைச்சல், தழைகண்ணிர் சொட்டும்; ஒளிநிறைந்து வான்பரந்து பொன்னருவி போல ஊர்நுழையும் செங்கதிர்கள்; ஓவியப்பே ரின்பம்! களிநிறைய உணர்வூட்டி உறங்குகின்ற மக்கள் கண்மலர்த்தும்; கதிர்க்கையை நீட்டிவரும் காலை 7 கொல்லையிலே இளநாகு கன்றுன்னிக் கத்தும்; குடிசெய்ய நீர்மொள்ளும் குடத்தோசை கேட்கும்; எல்லையிலே நிற்கின்ற பெருமலையின் உச்சி எரியிட்ட சூளையைப்போல் பனிப்புகையைக் கக்கும்; முல்லைநில ஆய்ச்சியர்கள் தயிர்கடையும் ஓசை முறைகெட்ட மலையருவி இசைப்பாட்டை ஒக்கும்; மெல்லமெல்ல ஒளிபெருகும்; ஊர்விழித்துக் கொள்ளும்; 4. விடிவெள்ளி அழத்தொடங்கும்; விரைந்துவரும் காலை! 8