பக்கம்:எழில் விருத்தம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7() அருவி கலைந்த கூந்தலை ஒத்திடும் முகில்கள் கவிழ்ந்த சாரலில் தழைத்துந ழுவியே மலைக டந்தனை: ஒடையாய்ப் பிரிந்து வந்து சேர்ந்தனை, முல்லையில் புகுந்து குலைகி டந்தநீள் வாழையைக் கரும்பைக் கொடுக்கும் நீள்வயல் மருதமே சிறக்க அலைகி டந்தமா அணையினுள் அடங்கி அற்ற காலமும் வயல்விளைத் தனையே! 3 செந்நெல் மாபலா வாழையும் கரும்பும் செழிக்கச் செய்தனை செய்தனில்! மருதக் கன்னல் தீமொழிக் கன்னியர் முகத்தைக் காட்டச் செய்தனை தாமரை மலரில்; பொன்வி ளைத்திடும் உழவரின் தொழிலில் பொங்கு மெல்லிசை அருவியே! அடடா! என்ன சொல்லுவேன்! கிள்ளையும் குயிலும் என்று கற்றன. உன்னிடம் உரையே? 4 காடு மேடுமண் கடந்தனர் உனது கால்க டந்தவ ழித்துணை அடைந்து; வீடு கண்டனர்; விளைநிலம் விளைத்து விளைவு கண்டனர்; வீரமும் கொடையும் மாட கோபுர மாநகர் மருங்கில் வாழும் மக்களும் உன்வழி நடந்து நாடு கண்டனர்; நன்னெறி வகுத்து நலமும் கண்டனர்; வாழிநீ அருவி! 5