பக்கம்:எழில் விருத்தம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் 7] இரைத்து வந்தனை சாரலில் அருவி! இழிந்து வந்தனை, ஒடையில் கலந்தே நுரைத்துச் சென்றனை நுழைந்தனை நதியுள்; நூறு காதமும் உன்வழித் தடுப்பைக் கரைத்து வந்தனை, கால்களாய்ப் பிரிந்து காத்து வந்தனை மக்களின் உயிரை; திரைத்து வாழ்ந்தனை நீள்கடல் புகுந்து செல்வம் தந்தனை, வாழிவா ழியவே! 6 உன்னில் எத்தனை எத்தனை கலங்கள்? உன்னில் எத்தனை எத்தனை படகு? . பொன்னும் மாமணிப் பொருள்களும் பெரிய பொதியும் தாங்கியே செல்வதை அறிந்தேன்; மன்னர் ஆட்சியை மக்களின் அரசை வாழ வைப்பதும் நீயென உணர்ந்தேன்; என்ன சொல்லுவேன் உன்னரும் சிறப்பை: இனிய பாடலுக் கீடெனல் முறையோ? 7 கோடி கோடியாய்க் கொட்டியும் விலகாக் கொல்லும் நோயினால் நல்லுடல் மெலிய வாடி வாடியே வருந்திய உயிர்கள் வந்து மூழ்கியே நலம்பெறல் அறிந்தேன்; காடு தாண்டியே நீள்மலை யிடையே கன்னிச் செந்தமிழ் போலநீ நிலைத்து நாடு தாண்டியே வருபவர் எவர்க்கும் நல்கும் மாமருந் தெங்கறிந் தனையோ? 8