பக்கம்:எழில் விருத்தம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 . வாணிதாசன் பண்டைத் தமிழ் மரபின் வழிவந்த பாவலர் வாணிதாசனார், பழைய தமிழின் பயன்மிகு பண்புகளை 'விண்வெளி ஆராய்ச்சிக்குகந்த' இன்றைய தமிழில் நம் இதயங்களைக் கவரும் வண்ணம் குழைத்துத் தருவதில் தன்னிகரற்று விளங்குகின்றார். அவர் மரபுவழிக் கவிஞர்! எனினும், பழைமைப் பாசறையின் காவலர் அல்லர்! "புதியன கண்டபோழ்து விடுவரோ புதுமை பார்ப்பார்" என்றதற்கிணங்கப் புதுவையைச் சேர்ந்த புலவர் வாணி தாசனார் புதுமைக் கவிஞராக - புரட்சிக் கவிஞரின் மதிப்பிற்குரிய மாணவராக மாண்புற்று விளங்குகிறார். அவருடைய கவிதைகளில் விண்ணைத் தீண்டித் தழுவும் மேகங்களை நாம் காணலாம்; இடியின் அதிர்ச்சி தரும் குரலைக் கேட்கலாம்; கண்ணைப் பறிக்கும் மின்னல் தோன்றி மறைவதைப் பார்க்கலாம்; மெல்லிய பூங்காற்று மெல்ல வீசுவதை உணரலாம்; வையத்தை வாழ வைக்கும் வான்மழை பையப் பெய்வதைப் பார்த்து மகிழலாம். வாணிதாசன் அவர்களுடைய கவிதையில் உலக உண்மைகள் உயிர்பெற்று உலவுகின்றன. போலி உணர்ச்சிகள் தோன்றுவதில்லை. காதற் கவிதையானாலும், வறுமையின் கொடுமையை உள்ளமுருகச் சித்திரிக்கும் பாடலானாலும் அதில் நாம் ஓங்கி ஒளிவீசும் ஓர்