பக்கம்:எழில் விருத்தம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 வாணிதாசன் இலக்கியம், விஞ்ஞானம் முதலிய பாடங்களைப் பிரெஞ்சு மொழியிலேயே பயில வேண்டும். அப்பொழுது என் வகுப்பிற்குத் தனித்தனியே பிரெஞ்சு மொழியாசிரியர்கள் வருவார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர் சிமோனேல். அவர் பாரிஸ் சென்று படித்த இலக்கியப் பட்டதாரி. என் வகுப்பிற்கு அவரே பிரெஞ்சு இலக்கியப் பாடங்கள் நடத்தி வந்தார். அவர் நடத்தும் பாடம் இனிமையாக இருக்கும். அவர் பிரெஞ்சுச்செய்யுளை விளக்கும் முறையைக் கேட்டுக் கேட்டுப் பிரெஞ்சுக் கவிதைகளின் மேல் மிகுந்த ஈடுபாடு எனக்கு வளர்ந்தது. அவர் அடிக்கடி 'உன் மண்டையைப். பார்த்தால் கவிஞர் Edmon Roskan சாயல் போலத் தோன்றுகிறது" என்பார். அவர் இன்று இல்லையென்றாலும் அவர் சொன்ன அந்தச் சொற்கள் என் காதில் இன்றும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நினைத்துப் பார்க்கின் அன்று நான் கவிஞனாவேன் என்று கனவு கூடக் கண்டதில்லை. ஆனால் தமிழக் கவிதைகள் மேலும் பிரெஞ்சுக் கவிதைகள் மேலும் எனக்கு ஈடு இணையற்றதொரு பிடிப்பு உண்டாகி இருந்தது. - 1932e},th sysos(B) Certificate Etude primoure Elimantaire Francaise என்ற பிரெஞ்சுத்தேர்வில் வெற்றி பெற்றேன். மீண்டும் புதுவையில் சென்றுதான் படிக்க வேண்டும். அவ்வாறே புதுவை கல்வே கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினேன். - - - என் சிறு வயது முதலே மரக்கறி உணவென்றால் எனக்கு ஒரே வெறுப்பு. என் பாட்டியால் புலால் உணவு ஊட்டியே வளர்க்கப்பட்டவன் நான். மாதம் ரூபாய் 10க்கு