61 7. இலங்கி வந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாகும். அவரே குமரி வேங்கடம் குண குட கடலா, மண்டிணி மருங்கிற் றண்டமிழ் வரைப்பு." எனறம் வேறோர் இடத்தில் கூறு கின்றார். 'வரைப்பு' என்றால் எல்லை என்று பொருள். ஆகவே நமது தேசீயத் தோழர்கள் கூறுவது போன்று இந்தியா என்று யாரும் கூறவில்லை தமிழ் கூறு நல்லுல கத்தைத் தனித்துதான் கூறி வந்தார்கள் கருவூர் கதப் பிள்ளைச் சாத்தனார் என்ற புலவரும் "இமிழ் கடல் வரைப் பில் தமிழகங் கேட்ப" என்று தான் கூறினார். எனவே திராவிடம் எனத் திரிந்து வழங்கும் தமிழகம் திராவிடர்க் சூரிய நாடாக இருந்து வந்ததென்பதை ஏடுகள் எடுத்துக் கூற அறிகிறோம். ய திராவிடர்க்குரிய திராவிடநாட்டில் ஆரியமொழியைத் தாய் மொழியாகக்கொண்டு ஆரிய வேதம் ஓதி ஆரிய நாக ரீகத்தைக் கடைப்பிடித்துவரும் அக்ரஹார வாசிகளாகிய பார்ப்பனர்களை நாம் ஆரியர் என்று சொல்லாமல் எப்படித் திராவிடர் என்று ஒப்புக்கொள்ள முடியும். ஆகவே தான் பார்ப்பனர்களை ஆரியர்கள் என்கிறோம். அவர்களிடத் திலே ஆரிய இன உணர்ச்சி இன்றும இருக்கக்காணலாம். சி.பியும், சி.ஆகும், டி.ஆர், வெங்கட்றாம சாஸ்திரியாரும் சிவசாமி அய்யரும், சீனிவாச சாஸ்திரியாரும், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரும் தங்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பினும் ஒருவரை ஒருவர் உயர்த்தியே கூறுவதன் நோக்கம் இன உணர்ச்சியன்றி வேறு எதுவாகும். ஒவ் வொரு பள்ளியிலும், கல்லூரியிலும் சமஸ்கிருத பகுப்பு: உ ண்டு அங்கே சமஸ்கிருதம் பிரிய பாடமாகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றது. அந்த வகுப்பில் உள்ள மாணவர் கள் எல்லோரும் பார்ப்பனர்கள். அவரையன்றி மற்றை யோர் அம்மொழியைக் கற்பதில்லை. சமஸ்கிருத மெ P அரசியலுக்குப் பயன்படுகின்றதா என்றால் இல்லை. அப் படியிருந்தும் பார்ப்பனர்கள் மட்டும் அந்த மொழியைக் கொள்வானேன். காரணம் அது ஆரிய மொழி. பார்ப் க
பக்கம்:எழுச்சி முரசு.pdf/10
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை