பக்கம்:எழுச்சி முரசு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 உறிஞ்சி, உப்பி, உல்லாச நகாங்களில் இருக்கவேண்டும் என்று வெள்ளையனா கூறுகின்றான்? குச்சி வீடுகளில் வாழ ஒரு சாராரும் மச்சு வீடுகளில் வாழ மற்றொரு வகுப்பாரும் இருக்கவேண்டும் என்ற முறையை எதிர்த்தால் வெள்ளைக் காரனா தடுக்கிறான்? நாட்டின் முன்னேற்றத்துக்குப் பாடு பட்டால் வெள்ளையன் தடுப்பானா? கடவுளைப் பார்ப்பான் அல்லாத ஏனையோர் தொட்டால் வெள்ளைக்காரன் தடுப் பானா? வெள்ளையன் இருக்கும் போதே இந்நிலையில் இருந் தால் 'சுயராஜ்யம்' வந்தால் எப்படி இருக்கும்! எங்களுக் குத் தெரியுமே எப்படி இருக்கும் என்று! இரண்டரை ஆண்டுகள் ஆண்டு காட்டினார்களே. பாராளும் மன்றம் பஜனைக் கூடமாக மாறும். ஆரியர்களுக்குச் சலுகை காட் டப்படும். ஆசாரி, ஆச்சாரி என்று போட்டுக் கொள்ளக் கூடாது என்ற சட்டம் பிறக்கும். திராவிடரை அடிமைப் படுத்த இந்தி வரும். வரிகள் ஏறும். இவற்றையெல்லாம் 'மாடல் சுயராஜ்யத்தில்' நாம் கண்டோமே! எனவேதான் ஆரிய - ஆங்கிலேய ஒப்பந்த ஆட்சி ஒழிக்கப்பட்டுத் தனித் திராவிடர் ஆட்சி நிறுவப்படவேண்டும் என்கிறோம். எங் தேசீயத் தோழனே! நீ சொல்லுகிறாய் வெள்ளையன் இந்நாட்டினின்றும் போய்விட வேண்டுமென்று. நாங்கள் வெள்ளையன் இங்கேயே இருக்கவேண்டும் என்று ஒருபோ தும் சொன்னதில்லை. வெள்ளையனோடு வேதியக் கூட்ட மும் போகட்டும் என்று தான் சொல்லுகிறோம். வெள் ளையனோடு குலாவி வெள்ளையன் சலுகையை பெ றுவது நீயா, நாக்களா? கவர்னர், வைசிராய் போன்ற ஆங்கிலே யர்களுடன் அடிக்கடி நீ தானே கை குலுக்குகிறாய். கள் தலைவர் பெரியார் இராமசாமி ஆளும் வெள்ளையனிடம் கைகுலுக்க விரும்பியதுண்டா இதைச் சொன்னால் உனக்குக் குலுக்குவதற்கேற்ற 'அந்தஸ்து' ஏது என்று கூறுவாய், தே சமயத்தில் கூறுகின்றாய் வெள்ளையருடன் உறவாடுபவர்கள் நாங்கள் என்று. முரண்பட்ட இரண்டிலே. எது பொருந்தும். நமது தேசீயத் தோழர்கள் திராவிட கழகத்தையும், முஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழுச்சி_முரசு.pdf/15&oldid=1732317" இலிருந்து மீள்விக்கப்பட்டது