24 றும் இந்தியா ஒரே நாடு என்றும் கூறுகிறார்கள். பாரதத் தாய் என்று ஒன்னானாள்? ஆங்கிலேயன் ஆட்சிக்கு முன்பு இந்தியா ஒன்றாக இருந்தது என்று எந்த தேசீயத் தோழ ராவது சரித்திரத்திலிருந்து சான்று காட்ட முடியுமா? இல்லாததொன்றை இருப்பதாக எண்ணிக் கொள்ளுவது எப்படி பொருத்த முடையதாகும். ஆ திராவிட நாட்டை நாம் ஆள வகையில்லாமல் இருப்ப தற்குக் காரணம் நம்முடைய அறியாமையேயாகும். மதத் தின் பேராலும், கடவுளின் பேராலும் நம்முடைய மக்கள் மடமையாக்கப்பட்டுள்ளார்கள். மக்களுக்கு அறிவு புகட்ட வேண்டிய 'சுதேசமித்திரன்' வாரத்திற்கொருமுறை ஸ்தல விமர்சனம் செய்து மக்களை பெரும் பொருள் செலவழிக்கு மாறு தூண்டுகிறது. கல்கி' எழுதுகின்றது இருபது ஆண்டுகளாகச் சுயமரியாதைக்காரர்கள் பிரசங்கம் செய்து வந்தபோதிலும் மாமாங்கத்திற்கு வரும் கூட்டம் அதிக மானதே ஒழிய குறையவில்லை என்றது. அந்த 'கல்கி'க் கு திருச்சி மாநாட்டிலே தோழர் சி. என். அண்ணாதுரை கொடுத்த சூடு போதும் மாமாங்கத்திற்கு மக்கள் போன தால் யாருக்கு நஷ்டம்! யார் படித்தும் படியாத முட் டாள்களானார்கள்! யார் சேற்றைப் பூசிக்கொண்டார்கள்! நாங்களா அல்லது கல்கியின வாசகர்களா? யாருக்கு இந் நாட்டில் இவற்றைப்பற்றியெல்லாம் கவலை இருக்கிறது? பத்திரிகைகள் மக்கள் அறிவுபெறும் வகையில் எடுத்துக் கூறுபதில்லை. மக்களின் பணம் பாழாக்கப்படுகிறது. கட அளின் பேராலும், மதத்தின பேராலும், இவற்றை எந்த தேசீயப்பத்திரிகை சிந்தித்தது. நூற்றிற்கு தொண்ணூறு பேருக்கு எழுத்து வாசனை இல்லை என்று கதறுகிறோம். இந்த நிலையல் 12 லகூம் ரூபாயில் திருப்பதி வெங்கடாஜல பதிக்கு வைர கிரீடமா! அதற்கு வேண்டிய வைரத்திற்காக சுராஜ்மல்ஸிடம் 12 லக்ஷ ரூபாயையும் வாரி இறைப்பதா! அறிவு நாள் தோறும் வளர்கின்றது அமெரிக்க நாட்டிலே அறிவு வளர்ச்சியின் பயனாக அணுகுண்டைக் கண்டுபிடித்து
பக்கம்:எழுச்சி முரசு.pdf/27
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை