பக்கம்:எழுச்சி முரசு.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக 29 ஏன துக்கொண்டிருக்கின்றன. மனிதன் தன் அறிவின் திறத் தால் இயற்கையைப் பிளக்கின்றான் வாழ்க்கையின் வசதிக் தென் அமெரிக்காவினின்றும் வட அமெரிக்காவை நிலத்தை வெட்டியே பனாமா கால்வாயால் பிரித்திருக்கின் றார்கள். சூயஸ்கால்வாயும் அப்படியே ஏற்பட்டது நாட்டை வெட்டிப் பிரித்தார்கள் ? இதைக்கண்டு அவர் களை நாட்டைத் துண்டாடுபவர்கள் என்று ஏசுவதா? அதைப் போல நாம் நிலத்தை வெட்டிப் பிரிக்கச் சொல்ல வில்லை. 'திராவிட நாடு' பிரிக்கப்படவேண்டும் எனபதே, எந்த துறையிலும் உயர்வு தாழ்வு கற்பிக்காத அறிவுடைய மக்கட் சமுதாயத்தை நாட்டுக்கேற்றமுறையில் அமைக்கவே யாகும். இதைப் பொதுமக்களை விட மாணவர்கள் வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவும் கூறவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. உணர தோழர் காந்தியார் துரத்தப் பட்ட இந்தியை மீண் டும் அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார் இப்பொழுது. தமிழரனைவரையும் ஹிந்தி கற்றுக்கொள்ளச் சொல்லுகிறார். ஹிநதி வந்தால் யாருக்கு நன்மை ஏற்படும்? வாணிபம் நடத்த ஹிந்தி யாருக்கு உதவி செய்யும் ? நமக்கா? வட நாட்டுக்காரனுக்கா? கரம்சந்துக்துக்கள் வடநாட்டுப் பொருள்களை இங்கு கொண்டுவந்து விற்பதற்கு ஹிந்தி வேண்டும். இன்று ஒரு பொன்மலைவாசி ஹிந்தி கற்றுக் கொண்டு வட நாட்டிற்குச் சென்று ஆதிக்கம் செலுத்த முடியுமா? வடநாட்டு பணியாக்கள் இங்கே வந்து குவிவ தற்கு வழியேற்படும். சரக்கு போடுவதற்கு வடநாடு சல்வதை தர இங்குள்ளவன் வாணிபம் செய்ய வடாரீடு செல்லுகிறானா? ஹிந்தியை நீங்கள் ஏன் கற்றுக்கொள்ள- வேண்டும்? அது தமிழைவிடச் சிறந்ததா? அது மொழி வளம் உள்ளதா? அல்லது கலைவளம் உள்ளதா? ஆங்கிலம் கற்றால் விஞ்ஞான அறிவு வளரும். என் அதனைக் கொண்டு உலகத்தையே சுற்றலாமே! ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கற்றால் விஞ்ஞான அறி வோடு உலக அறிவும் பெறலாம். நியூயார்க்கில் கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழுச்சி_முரசு.pdf/32&oldid=1732335" இலிருந்து மீள்விக்கப்பட்டது