6 தொல்காப்பியம், திருக்குறள்,பத்துப்பாட்டு, பதிற்றுப் பத்து. அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், மணி மேகலை என்றார்கள். பிறகு அக்ரஹாரத்திற்குச் சென் றோம் அங்கே புது ஒலியைக் கேட்டோம். அது தமிழி னும் முரண்பட்டிருக்கக்கண்டோம். அங்கிருப்பவர்களை உங்கள் தாய்மொழி எது என்று கேட்டோம். சமஸ் கிருதம்' என்றார்கள். என்றார்கள். பின்பு சிந்தக்கத் தொடங்கினோம். சிந்து நதிக்கரையில் பிறந்த சமஸ்கிருதம் இங்கு நதிக்கரையில் ஏற்பட்ட ஆரியருக்குரிய 6 ஏன் வந்தது. சிந்து நான்கு வேதங்கள் திராவிட நாட்டிற்கு வருவானேன் தமிழல்லாத ஆரிய மொழியில் எழுதப்பட்ட வேத, இதி காச, ஸ்மிருதி புராண உபநிஷத்துக்கள் கிராவிட நாட் டில் ஒதப்படுவானேன்? என்று கேட்டறிந்த பின்தான் அக்ரஹாரத்து வாசிகள் ஆரியர்களெனத் தெரிந்துகொண் டோம் 6 ரா நமக்குரிய ஆனால் நம்மால் மறக்கப்பட்டிருக்கும் திர விடம் தனி நாடாகத்தான் இலங்கி வந்தது என்பதற்கு இலக்கியச் சான்றுகள் பல காட்டமுடியும். இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய தொல்காப்பியத் தின் சிறப்புப்பாயிரத்தில் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத், தமிழ் கூறு நல்லுலகம் " என்று கூறப்பட் டிருப்பதால் வடக்கே வேங்கட மலையையும், தெற்கே குமரி யாற்றையும் கிழக்கேயும் மேற்கேயும் கடல்களையும் எல்லை யாகவடையதாக இருந்தது தமிழகம் என அறிகின்றோம். காக்கைப்பாடினியார் என்ற புலவரும் வடக்குந் தெற் குங் குணக்குங் குடக்கும், வேங்கடங் குமரித்தீம்புனற் பௌவமென, இந்நான்கெல்லை அக்வயிற்கிடந்த, நூலதின் முறையே வாலிதின் விரிப்பின் " என்று அதே எல்லைக் சேட்டைக் குறிப்பிடுவது காணலாம். இளங்கோவடிகள் கூட தாம் எழுதிய சிலப்பதிகாரத்தில்"நெடியோன் குன் றமும் தொடியோன் பௌவமும், தமிழ் வழிம்பறுத்த தண் புனல் நன்னாடு" என்று குறிப்பிடுவதும் திராவிடம் தனியே 6
பக்கம்:எழுச்சி முரசு.pdf/9
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை