பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25


தரம் உயர்ந்திருக்கிறதா ? இதை உரிய இடத்தில் கவனிப்போம்.

லாபகரமாக வளரப் போட்டியிடுகிற வாரப்பத்திரிகைகள், அட்டை அமைப்பிலிருந்து, உள்விஷயங்கள், கதைகள் துணுக்குகள், ஜோக்குகள் வரை சகலவற்றிலும் - குமுதம்' இதழை காப்பி அடிப்பதை ஒரு தர்மமாகக் கொண்டு விட்டன.

அதனால், முன்பு ஒரு குமுதம் இருந்த இடத்தில் இப்போது பல குமுதம்கள் காணப்படுகின்றன’ என்று விமர்சகர்கள் குறிப்பிடுகிற நிலமை நாட்டிலே சகஜமாகிவிட்டது. தனக்கென ஒரு தனித்தன்மையை உண்டாக்கி, அதைக் கட்டிக் காத்து வளர்க்க வேண்டும் என்கிற ஆர்வமும் செயல்வேகமும் வாரம்பத்திரிகைகள் நடத்துகிறவர்களுக்கு இல்லாது போய்விட்டது.

இவ்வளவுக்கும், பண அதிபர்கள் மட்டும் தான் பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டிருக்கிருர்கள் என்றில்லை. எழுத்தாளர்களாக இருந்து, பத்திரிகைகளில் உதவி ஆசிரியர் களாகப் பணிபுரிந்து வளர்ச்சி பெற்றவர்களும், எப்படியோ பணம் சேர்த்து, அதிக மூலதனம் ஈடுபடுத்தி, தொழில் முறையில் பத்திரிகைகள் ஆரம்பித்து நடத்துகிறார்கள். அவர்களும் தொழில் அதிபர்களாகத்தான் மாறியிருக்கிறார்கள்.

அவர்களுக்கும் பத்திரிகைகள் லாபம் பெற்றுத் தரக் கூடிய - தரவேண்டிய - வணிக சாதனம் தான். அந்நோக்கில் தான் அவர்களும் தங்களது பத்திரிகைகளை நடத்துகிறார்கள்.

பத்திரிகையை தொழில் முறையில் வளர்ப்பதற்காக