பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

வானம்

‘மயன்’

    பட்டுக் கருநீலப்புடவையு மல்ல, பதித்த
      நல் வயிரமும் அல்ல. அண்ணாந்து நோக்கி
      அதனைக் கண்ணால் தொட்டுப் பார்த்தால்
      அறிவோம் - பூச்சி அரித்த, ஒளிப் பூச்சி
      அரித்த கறுப்புப் பழம் கம்பிளி அது.
ஆடிப்பாடி ஒய்ந்து, கூடி நின்று கூத்
தடித்து அயரும் வேளையிலே, குளிர் அடங்க
அதை எடுத்துப் போர்த்து மடக்கிக்
கொண்டு கிடக்க முடியுமானால் நன்றாக
இருக்கும் - அநாவசியமாக உயரப் பறக்கிறதே!
}}

('ஹல்மே’ என்கிற ஆங்கிலக் கவி எழுதியதைப் பின்பற்றி)



நெஞ்சறிந்து கொண்ட நிலையில், பழக்கமாகி அல்லது இயல்பாகி விட்ட நமது படைப்புப் பழக்கத்தை, புது முகப்படுத்த வேண்டியது பற்றி பரிந்துபேசி எடுத்துச் சொல்லின. வெறும் உபதேசத்தோடு அவர் நின்று விடவில்லை. கவிதைத்துறையில் சுப்ரமண்ய பாரதியும் வசனத்துறையில்நாவலாசிரியர்களான வேதநாயகம் பிள்ளை, ராஜம் அய்யர் மாதவையா ஆகியோரும் செய்த அந்த நாளைய சோதனைகளைஅளவிட்டார். 'புதிய இயக்கம் பிறந்ததும் அதற்கேற்ற கவி ஒருவரும் தோன்றினார்’ என்று பாரதியைப் பற்றி, அவரது கவிதைகளைக் குறித்து, ஒரு சுருக்கமான ஆராய்ந்த அபிப்ராயம் கூறி இருக்கிறார்.

ஆனாலும், கம்பராமாயணப் படிப்பில் தான் அய்யரது திறனாய்வு சக்தி உச்சநிலையை அடைந்திருப்பதை ஒருவர் பார்க்க முடிகிறது. கம்பராமாயண ரசனை என்ற அவரது விமர்சன நூல் (அதில் உள்ள கட்டுரைகள் 1920க்கு பின் வந்த வருஷங்களில் அவரது ‘பால பாரதி பத்திரிக்கையில் வெளியாயின) இதுவரை கம்பனைப் பற்றி வந்திருப்பவைகளில் தலை சிறந்ததென ஒரு முகமாகக் கருதப்பட்டு வருகிறது. பெரும்பாலும் குணம் காண்கிற நோக்குடனே மட்டும் செல்வக் கேசவராய முதலியார், வெ.ப.சுப்ரமண்ய முதலியார், பி.ஸ்ரீ. ஆசார்யா, எஸ்.டி.எஸ். யோகி, அ. ஸ்ரீனிவாசராகவன், கி.வா.ஜகந்நாதன் ஆகியோர் பாராட்டி, சிலாகித்து எழுதியதினின்று மாறுபட்டு, அவரது விசாரணை, குணம்

94