பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்


குறை இரண்டையும் எடுத்துக்காட்டும் வழி வந்ததாக இருக்கிறது. அவருக்குப் பின் டி.கே. சிதம்பரநாத முதலியாரது கம்பராமாயண ஆராய்ச்சி, விமர்சன மதிப்பு வாய்ந்ததாக உள்ளது என்று சொல்லலாம். தன் வாதத்துக்கு ஆதாரம் காட்ட இன்னின்ன கவிதைகள் கம்பன் எழுதியது அல்ல என்று சொன்ன அளவுக்குப்போனவர் அவர்தான். கவிதை விமர்சனப் போக்கில் அவரது கம்பன் கவி இன்ப அநுபவம் ஒரு கட்டத்தை அடையாளம் இடுவதாக இருக்கிறது.

ஒரு நூலை ‘சிலாகித்துப்பாராட்டுவது' என்பதற்கு நான் கொண்டிருக்கும் அர்த்தம், அந்த நூலின் நல்ல அம்சங்களைப் பற்றி மட்டுமே விஷயம் அறிந்து இருப்பது என்பது; விமர்சிப்பது என்பது அதன் தரத்தை மதிப்பிடுவதில் திறன் பெற்றிருப்பது என்பது. இந்த புதிய முறையைக் கைக்கொண்டு ஆர்.பி. சேதுப் பிள்ளை, ம.பொ. சிவஞான கிராமணி இன்னும் சிலர் சிலப்பதிகாரத்தை, குணம்காணும் தோரணை காட்டி சிலாகித்து எழுதி இருக்கிறார்கள். ஆர்.எஸ். தேசிகன் வேறு பல நூல்களை ஒப்பிட்டுப் பார்த்து எழுதி இருக்கிறார். இதில் ஈடுபட்டு உள்ள பலரில் சிலரைத்தான் நான் குறிப்பிட்டு இருக்கிறேன். -

தற்கால விமர்சன தொனி

தற்காலத்திய கவிதைகள் பற்றிய விமரிசனத் தன்மையை பார்க்கப்போனால் இந்த நூற்றாண்டின் இதுவரைய ஆண்டுகளின் தனிப்பெரும் கவியான சுப்ரமண்ய பாரதிக்கு, அவரது கவிதைகளைப் பற்றிய சிறந்த விமர்சன தோரணை மதிப்பீடு இனித்தான் கிடைக்கவேண்டும். பெ.கோ. சுந்தரராஜனும் (சிட்டி) கு.ப. ராஜகோபாலனும் மேல்நாட்டு கவிதை இலக்கியத்துடன் தங்களுக்கு ஏற்பட்டிருந்த பரிச்சயத்தின் வெளிச்சத்தில் கவிதை அமைப்பு, பாரதியின் கருத்துபற்றி ஆராய்ந்து எழுதிய 'கண்ணன்-என் கவி' என்ற குணம் காணும் முறையைப் பின்பற்றிய புஸ்தகம் ஒரு ஆரம்பம் எனலாம். அ. ஸ்ரீனிவாசராகவன், பி. மகாதேவன் ஆகியோர் எழுதியுள்ள புஸ்தகம் பாரதி கவிதைகள் விமர்சன நூல்களில் குறிப்பிடத்தக்கதாகும். இன்றைய கவிகளோ, தங்களைப் பற்றிய

95