பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இலக்கிய சர்ச்சைகள்

சில இலக்கிய சர்ச்சைகள் குறிப்பிடத்தக்கவை. ஒன்று, பாரதிக்குப்பின்பேர் சொல்லக்கூடியதாக்கான இலக்கி யாசிரியரான வ.ராவுக்கும் புகழ்பெற்ற எழுத்தாளரும்பிரபல பத்திரிகாசிரியருமான கல்கிக்கும் இடையே இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பாரதிக்கு உரிய இலக்கிய பீடம் பற்றி நடைபெற்ற சர்ச்சையாகும். அப்போது இலக்கிய அளவை, லக்ஷணங்கள் கடுமையான பரிசோதனைக்கு உள்ளாயின. பாரதிக்கும் வ.ராவுக்குக்கும் பிறகு தமிழ்பேனா பார்த்தே இராத ஒரு தீவிரவாதத்துடன், இலக்கியத் திருட்டு, மேலோட்டம் எழுத்து இவைகளுக்கு எதிராக, சிறந்த சிறுகதை எழுத்தாளர் புதுமைப்பித்தன் தாக்குதல் மற்றொன்று. சமீபத்தில் தற்கால சிறுகதை நாவல் இலக்கியம் பற்றி அதைப் படைப்பவர்களிடையே நடந்த சர்ச்சையும் குறிப்பிடத்தக்கது.

இப்போது ஒரு புதிய உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள எழுத்தாளர்களும், அதற்கு வெளியே பிற ராஜ்யங்களில் உள்ள தமிழ் எழுத்தாளர்களும் அங்கங்கே தங்களுக்கென எழுத்தாளர் சங்கங்களை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அடிக்கடி கூடி முற்கால, இன்றைய எழுத்தாளர்களது நூல்களைப்பற்றி விவாதிக் கிறார்கள். இலக்கிய விஷயங்கள் பற்றிய விவாதங்கள் சொற்பொழிவுகள், கருத்தரங்கங்கள் நடத்துகிறார்கள். இன்னொன்றும் சொல்ல வேண்டும். வாசகர்கள் சங்கங்களும் சில இலக்கியப் பிரச்சனைகளை ஆராய்வதில் ஈடுபட்டு இருக்கின்றன. இவைகளில் அநேகமாக முழுவதுமாக அச்சுக்கு வராமலே இருந்து விடுகின்றன. அதனால்தான், ஆரம்பத்தில், வெளியான புஸ்தகங்கள், பத்திரிகை,சஞ்சிகை பத்திகள், மதிப்புரைகள் இவைகளைக் கொண்டு மட்டும் தமிழ் இலக்கிய விமர்சனம் பற்றிய ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது என்று எச்சரிக்கை கூறினேன்.

புஸ்தகமதிப்புரைகளைப் பற்றி இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தமானது ஆகும். மேலே குறிப்பிட்ட இரண்டு இங்கிலீஸ் மதிப்புரைகளின் முறையும் சாரமும் மதிப்புரையாளர்களால் தொடர்ந்து பொதுவாகப் பின்பற்றப்படவில்லை என்பது உண்மைதான். இவைகளில் பெரும்பாலானவை பத்திரிகை வார

97