பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா


நம்பிக்கையில்லாததனால் எழுகிறது என்று தோன்றுகிறது. அடிப்படையாக, மனிதன் ஒவ்வொருவனும் தனியன்தான். சமூக விவகாரங்களெல்லாம் இந்தத் தனிமையை எவ்வளவு தூரம் காண முடியும். அது எவ்வளவு தூரம் சாத்யம் என்று கண்டுபிடிக்கிற முயற்சிதான். கம்யூனிஸம் கூட இந்தத் தனிமையின் ஆழத்தைக் கண்டுபிடிக்கிற முயற்சிதான். அவர்கள் இல்லை என்று மறுத்தால், அதற்கு நாம் என்ன செய்கிறது!

மேனாட்டு இலக்கியங்களின் தொடர்பால் இலக்கியப் பொருள் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்று நாம் திட்டமிடுகிறோம் என்று தோன்றுகிறது. மனிதனின் பரநிலைகளைக் காணும் விஞ்ஞானத்தைக் கண்டதால் நம் நாட்டு இலக்கியங்கள் இப்படி எல்லை கட்டிக் கொள்ளவில்லை. மேனாட்டு இலக்கியங்களிலும் இப்படி எல்லைக் கட்டிக் கொள்ளாமல் உள் நோக்கிப் பாய்ந்த பல இலக்கிய மேதைகள் இருந்திருக்கிறார்கள்.

வெங்கடராமனே முன்னுரையில் சொல்கிறார் - கடவுட் பிரசாரமாக இதை எழுதவில்லை என்று. அவர் சொல்லியிருக்கத் தேவையில்லை. ஆனால், இப்போதுள்ள சந்தர்ப்பங்களைக் கண்டுதான் அப்படிச் சொல்லியிருக்கிறார் அவர். ஆகவே, தற்செயலாக ஏற்பட்டதுதான் இந்த இரண்டு கதைகளின் பொருட்களும்.

கதை விஷயத்தைப் பற்றி சர்ச்சை போதும். சொல்லுகிற வல்லமை அவருக்கு எவ்வளவு வசப்பட்டிருக்கிறது என்பதை விரிவாகக் கண்டு அனுபவிக்க முடிகிறது. அவர் நடையிலும், சொல்லாட்சியிலும் ஒரு அசாதாரணத் தன்மை இயற்கையாகவே ஒலிக்கிற வழக்கம். இதை அவர் எழுதிய அந்த நாட்கதைகளிலேயே காணமுடியும். உறுதியும் சுயப்பிரக்ஞையும் தெறிக்கிற அசாதாரணத் - தன்மை அது. அதனால்தான் மனித மனத்தின் பல விசித்திரங்களைப் பொருளாகக் கொள்ள முடிந்திருக்கிறது அவரால். அந்த உறுதியின் விளைவாகத் தீவிரமான முனைப்புடன் சொற்கள் நோக்கத்தை நோக்கி ஒடுகின்றன.


.

106