பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



காந்தியவாதி செல்லப்பா
ஏ.என்.எஸ். மணியன்



நான் சுமார் 14 ஆண்டுகள் தினமணி காரியாலயத்தில் கேன்டீன் வைத்திருந்தேன். அக்காலத்தில் கேன்டீனுக்கு மதியம் டிபனுக்கு அனேகமாப் ஆசிரியர் குழுவினர் அனைவரும் வருவார்கள். ஆனால் திரு. சி.சு. செல்லப்பாவும் திரு. ஏ.என்.எஸ்ஸும் வந்ததில்லை. ஆகையால் திரு. சி.சு.செ. அவர்களின் கதைகளை கலைமகளில் படித்திருந்தாலும் அவரைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை.

தினமணி பத்திரிகைத் தொழிலாளர்கள் ஸ் டிரைக்கினால் பத்திரிகை நிறுத்தப்பட்டது. பின்சிறிது காலம் சென்று சித்துரிலிருந்து வெளி வரத் தொடங்கியது. என் வியாபாரம் (கேண்டீன்) மூடப்பட்டது. நான் சித்தூருக்குப் போகவும் இல்லை. ஆபீஸ் நிர்வாகம் என்னைக் கூப்பிடவும் இல்லை.

நானும் பல இடங்களில் அலைந்துவிட்டு திருவல்லிகேணியில் திருவெட்டீஸ்வரன் பேட்டை என்று அழைக்கப்படும் பகுதியில் பிள்ளையார் கோவில் சந்து (முதல்) 76 எண் உள்ள வீட்டில் சிறிய அளவில் சிற்றுண்டிவிடுதி நடத்திக்கொண்டிருந்தேன். என்கடைக்கு வேலையாள்கள் யாரும்இல்லை. தானும் என் மனைவியும் தான் எல்லாம் தாங்கள் தயார் செய்து விட்டு விற்பனையை நான் மட்டும் செய்வேன். அப்பொழுதுதான்மாலை சுமார் 4 மணிக்கு ஒருவர் வந்து 4 இட்டிலி கட்டிக்கொடுக்கும்படி கேட்டார். நான் அவர் கேட்டதைக் கட்டிக்கொடுத்ததும் அவர் காசு கொடுக்கும் போது அவர் கையில் மஞ்சள் நிற அட்டை போட்ட ஒரு புஸ்தகம் இருந்ததை என் கண் கண்டது. அட்டையில் இருந்த 'சுவை 1' இலக்கியக்கட்டுரைகள் சி.சு. செல்லப்பா என்று இருந்ததைப் படித்தேன். நான்

113