பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

வருகிறவர்களுக்கும் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றும், கார வகை மெது பகோடா என்று ஒரு ஐட்டம் போடுவோம், இதுவும் வாங்கிச் சாப்பிடக் கொடுப்பார். தன் வீட்டில் தன் மனைவியாரை, தேனீர் போட்டு கொடுக்கச்செய்வார். பின் என்னைச் சந்திக்கும் பொழுதெல்லாம், சுப்பிரமணிய அய்யர் (என்னை இப்படித் தான் பெயர் சொல்லிக் கூப்பிடுவார்) நீர் கடை வைத்தது எனக்கு ரொம்ப உபகாரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்று பலமுறை சொல்லி இருக்கிறார்.

இந்தக் கால கட்டத்தில் ஒரு நாள் 'இந்தியா டுடே’ ஆசிரியை வாசந்தி அவரைக் காண வந்தார். அவருக்கு விலாசம் சரியாகத் தெரியவில்லை. அந்தச் சந்தில் தான் என் கடையிருக்கிறபடியால் சி.சு.செ. வின் பெயரைச்சொல்லி வீட்டைக் கேட்டார். நான் கூடவே அழைத்துப்போய் அவர் வீட்டைக் காண்பித்துவிட்டு திரும்பிய பொழுது திரு. சி.சு.செ. அவர்கள் என்னைபெயர்சொல்லி அழைத்து ஆசிரியை வாசந்தி அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தினார். உடனே வழக்கம்போல் அல்வாவும், பகோடாவும் வாசந்தியுடன் வந்த ரவீந்திரன் என்ற எழுத்தாளர்க்கும் வரவழைத்து கொடுத்து விட்டு தான் வாசந்தி அவர்கள் வந்த விவரத்தைப் பற்றி கேட்டார்.

பிறகு அவர் எழுதிய சுதந்திர தாகம் நாவலில் ஒரு சிறிய பகுதியை வாசந்தி அவரிடம் கேட்டார்கள். சி.சு.செ. அவர்களும் இந்தியா டுடேயில் இரண்டு பக்கங்கள் வரும் அளவிற்கு வரும் கையெழுத்துப் பிரதியின் நகலைக் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்டு சென்று விட்டார். வாசந்தி அவர்கள் அடுத்த மாத இந்தியா டுடேயில் அவர்கொடுத்த பகுதி அப்படியே வந்து விட்டது. (அந்த இதழுக்கு இரண்டாயிரம் பணமும் திரு.சி.சு.செ. அவர்களுக்குக் கிடைத்தது)

அதன் பிறகு எப்பாடுபட்டாவது சுதந்திரதாகம் 3 பாகங்களாக எழுதி வைத்திருந்த கை எழுத்துப் பிரதியை வெளியிட சுமார் 20 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்றும் நான்கு பேர்களிடம் (என்நெருங்கிய நண்பர்கள்) தலைக்கு 5 ஆயிரம் கடன்வாங்கியாவது வெளியிடப் போகிறேன். நீரும் ஐந்தாயிரம் கொடுங்கள் புஸ்தகம் வெளிவந்ததும் திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று என்னிடம் சொன்னார். அந்த சமயம் என்னுடைய மாதாந்திர

115