பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

கூட பல இலக்கிய கூட்டங்கள் இதே தெருவில் இருக்கும் எச்.எச்.மண்டல் பள்ளி கூடத்தில் நடத்தி இருக்கிறார். இம்மாதிரி காரணங்களால் பெங்களூரில் இருக்கும்தன் மகன், மருமகள் பேரன், பேத்தி இவர்களை சென்னைக்கு வரவழைத்து இவர்கள் தங்குவதற்கு இவர்குடியிருக்கும் வீட்டிற்கு அருகிலேயே சி.சு.செ.வின் மைத்துனி (இவர் மனைவியை விட மூத்தவர்.) தன் மகன் மருமகளுடன் குடியிருந்தார். மைத்துணியின் வீடு அவர்களுக்கு சொந்தமானது. உறவினர்கள் வந்தால் தங்குதற்கு தடையில்லை. இத்யாதி காரணங்களினால் தன் பேரனின் பூணூல் கல்யாணத்தை நடத்தி மகிழ்ந்தார்.

அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படும் விளக்கு என்ற அமைப்பு முதிய தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு கெளரவமும் சன்மானமும் அளிக்கமுடிவு செய்தது. திரு. சி.சு.செ. அவர்களை அக்குழுவினர் தேர்ந்தெடுத்தார்கள். அவர்களுடைய நோக்கம் ஒரு கூட்டம் நடத்தி பாராட்டிவிட்டு ரூபாய் இருபதினாயிரம் நிதி வழங்குவது. ஆனால் திரு. சி.சு.செ. அவர்கள் எனக்கு பணம் தேவை இல்லை, என்னுடைய வெளிவராத நூல் ஒன்றை வெளியிடுங்கள் என்றார்.

பணத்தை மறுத்த மிகச் சிறந்த படைப்பாளிகள் எனக்குத் தெரிந்து இரண்டுபேர்தான். ஒன்று சி.சு.செ. மற்றொருவர் சினிமாவிற்கு கதை வசனம் எழுதும்படி வருந்தி வருந்தி அழைத்த சினிமா முதலாளிகளை ஏறெடுத்தும் பார்க்காத படைப்பாளி திரு. வல்லிக்கண்ணன் அவர்கள். இருவரும் நண்பர்கள் தான். இருவரும் எளிமையானவர்கள். இருவரும் காந்தியவாதிகள். என் கருத்துப்படி திரு.வ.க. அவர்கள் முள் இல்லாத ரோஜா. திரு.சி.சு.செ. அவர்கள் முள்ளில் ரோஜா. இருவருக்கும் இன்னும் பல ஒற்றுமைகள். இரு நண்பர்களும் உயர்ந்த சிறந்த படைபாளிகள் என்பதை தமிழ் இலக்கிய (புதுக்கவிதை உள்பட) உலகம் மறக்காது. மறைக்கவும் இயலாது.

அமெரிக்காவில் உள்ள விளக்கு (அமைப்பு) வெளியிட்டது தான். திரு. சி. சு. செல்லப்பாவின் சிறுகதைப் பாணி என்ற அருமையான ஆராய்ச்சியும் அனுபவமும் நிறைந்த நூல். சென்னை

120