பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2



எழுத்துஇரண்டாவது இதழின் சிறப்பம்சம் ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதியாகும். 'அரங்கம்' என்ற தலைப்பிட்டு வாசகர்களின் கடிதங்களை வெளியிட்டிருக்கிறார் செல்லப்பா.

இந்தப்பகுதியை வெறும் பாராட்டு அல்லது தாக்குதல் கடிதங்களை வெளியிடும் பகுதியாகக் கருத வேண்டாம் என்று வாசகர்களுக்கு உணர்த்துவதுபோல 'அரங்கம்’ என்ற தலைப்புக்குக் கீழேயே இலக்கியத் தரமான கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் களம் என்று அரங்கத்திற்கு ஒரு விளக்கத்தையும் அளித்திருக்கிறார்.

இன்றும் பத்திரிகைகள் எல்லாவற்றிலும் ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதி வந்து கொண்டு தானிருக்கின்றன. “வாவ்" “பிரமாதம்" 'தோலுரித்துக்காட்டிவிட்டார்' ஜொள்ளுவிடச்செய்து விட்டீரே 'கீப்இட் அப்' போன்ற பாணியிலான கடிதங்களாகவே வெளியிடப்படுகின்றன. எல்லாமே நாலடியார்போல நாலு வாக்கியக் கடிதங்கள்தான். எல்லாக்கடிதங்களுமே வாரா வாரம் எல்லா ஏடுகளிலும் 'கீப் இட்அப்' என்று அந்தந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் முதுகில் ஒரு கார்டு மூலமே ஷொட்டுக்கொடுக்கும் கடிதங்களாகவே இருப்பதையும்-இப்படி எல்லா ஏடுகளிலும் கடிதம் மூலம்பொன்னாடை - பூமாலை அணிவிக்கவென்றே தமிழகத்தில் சில வாசகர்கள் இருக்கின்றார்கள் என்பதையும் அடையாளம் காட்டும் கடிதங்களாகவே இவை அமைந்திருக்கின்றன.

செல்லப்பாவின் முதல் இதழைப் படித்துவிட்டுக் கடிதம் எழுதிய வாசகர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல; அவர்கள் எழுத்து முதல் இதழில் வெளிவந்த கட்டுரைகள் பற்றி 'ஷொட்டு'க் கொடுத்து மிருக்கிறார்கள். குட்டுவைத்தும் குறைகூறி இருக்கிறார்கள். குற்றஞ்சாட்டியும் இருக்கிறார்கள். செல்லப்பாவும் நிறை-குறைகள் ஆகிய இரண்டையும் சொல்லி - ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் கூறி இருப்பவர்களின்கடிதங்களை மட்டுமே வெளியிட்டிருக்கிறார்.

135