பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/150

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வல்லிக்கண்ணன்

அதிபர்களுக்கும் நன்றி செலுத்தி இருந்தாலும் (இலக்கியத்தில் ஒரு மைல்கல் என்று சொல்லவிரும்பவில்லை என்று அவர் சொல்லிக் கொண்டாலும்) முன் வரிசையில் கட்டாயமாக நான் சேர்க்கக்கூடிய ஒரு சிறுகதை ஆசிரியரது இலக்கியத்தரமான கதைகளாகத்தானே இருக்கின்றன. அகிலன், ரசவாதி போன்றோர் கதைகளை இலக்கிய ரீதியில் பார்த்து குணம், குறை எடுத்துக்காட்ட வேண்டியதுதான் விமர்சனப் பார்வையே ஒழிய சட்டடியாக பத்திரிகை ரகம் என்று புறக்கணிப்பது அல்ல. இப்படி இன்னும் பல கருத்துக்களை சொல்லிக் கொள்ளத் தோன்றுகிறது. அதற்கான சந்தர்ப்பங்கள் பின்னால் ஏற்படுத்திக் கொள்ளலாம். ஒன்றை மட்டும் சொல்லிக் கொண்டு முடிக்கிறேன்.

பகுப்புமுறைத் திறனாய்வு மூலம் படைப்புகளையும் மதிப்பிட்டு ஒரளவுக்கு சாதித்த பிறகுதான் ஒருவர் தருகிற பட்டியலுக்கு அந்தஸ்து, மதிப்பு, நம்பிக்கை ஏற்படச் சாத்யமாகும் என்று எனக்குப்படுகிறது.” என்கிறார் செல்லப்பா

எழுத்து இரண்டாவது இதழ் மூலம் வாசகர்கள் ஆசிரியருக்கு எழுதும் கடிதங்கள் - பகுதியையே முழுமையான ஆரோக்யமான விமர்சனத்திற்கான களமாக மாற்றி பிறஏடுகளுக்கும் இந்த ஆசிரியருக்குக் கடிதம் பகுதியை எவ்வளவு பயனுள்ள பகுதியாகவும் கருத்துப் பரிமாற்றத்துக்கான கருவியாகவும் பயன்படுத்தலாம் என்று வழிகாட்டி இருக்கிற செல்லப்பா வாசகர் கடிதங்கள் பகுதியில் தன்னையும் ஒரு வாசகராக இணைத்துகொண்டு - விமர்சனம் எப்படி இருக்க வேண்டும்? கதைகளின் தரத்தை அவை வெகு ஜன ஏடுகளில் வெளிவந்தவை என்பதை வைத்து நிர்ணயிக்கலாமா? என்பன போன்ற பிரச்சினைகளின் எழுத்துவின் நிலைப்பாடு என்ன என்பதையும் அடையாளம் காட்டி இருக்கிறார்.

இந்த இதழில்-பிழை திருத்தம் பகுதியில்-'தர்க்கம்' ஆசிரியர் பெயர் ஜெயகாந்தன் என்று இருக்கவேண்டும் என்று ஒரு திருத்தம் வெளியிடப்பட்டுயிருக்கிறது. 46ஆம் பக்கத்தில்உள்ள தர்க்கம் சிறு கதையில் இது ஜயகாந்தன் என்று அச்சாகியிருக்கிறது. பத்திரிகை அச்சு வாகனம் ஏறும் கடைசி நிமிஷம் வரையில் செல்லப்பா பத்திரிகையில் தவறுகள் இல்லாமல் வெளிவரவேண்டும் என்று அக்கரை காட்டுபவராக இருந்திருக்கின்றார் என்பதையே இந்தத் திருத்தம் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

143