பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வல்லிக்கண்ணன்



பரங்குசம் எழுதிய கதையை 'எழுத்து' எதற்காக வெளியிட்டிருக்கிறது என்றே புரியவில்லை. நீங்கள் மற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளை சீர்தூக்கிப் பார்ப்பது அப்புறம் இருக்கட்டும் 'எழுத்து' பத்திரிகையில் வெளியிடும் சிறுகதைகள் எல்லா அம்சங்களிலும் உயர்ந்தவைகளாக இருக்கும் நட்சத்திரக் கதைகளாக இருக்க வேண்டாமா? ஊர் உலகத்துக்கெல்லாம் விமர்சனம் செய்து விட்டு உங்கள் சொந்த பத்திரிகையிலேயே 'வெற்றியின் பண்பு' போன்ற சாதாரண பத்திரிகைக் கதைகளை வெளியிட்டு பத்திரிகை ஆசிரியரின் கதை பொறுக்கும் திறமையை (2) மற்றவர்கள் சந்தேகிக்கும்படி ஏன் விடுகிறீர்கள்?" என்று கேட்டிருக்கிறார் ஜடாதரன்

ஜடாதரனின் குற்றச்சாட்டுக்கு பதிலளிப்பதற்கு முன்பு வாசகர்கள் எழுதும் கடிதங்களையும் வாசகர்களின் விமர்சனக் கண்ணோட்டம் அதிலே சிறந்து விளங்குவதையும் பாராட்டி இருக்கிறார் செல்லப்பா.

“இந்த எழுத்து ஏட்டின் கடைசி இரண்டு பக்கங்களில் ‘எழுத்து'க்கும் அதன் ஆசிரியருக்கும் வந்த கடிதங்கள் பலவற்றிலிருந்து பொறுக்கியவைகளிலிருந்து எடுத்துள்ள குறிப்பிடத் தகுந்த வரிகளைப் பார்க்கலாம். ஏதோ பத்திரிகையைப் படித்தோம்; ஆசிரியரையோ, எழுத்தாளரையோ பாராட்டினோம் என்றும், தங்கள் பாராட்டுக்கடிதம் பிரசுரிக்கப்படுமா என்றெல்லாம் நினைக்காமல் தங்கள் அப்பிராயங்களை துணிந்து கூறியுள்ள வாசகர்களுடையவை அவை.

இவை பல விஷயங்களைத் தெளிவுபடுத்த-தெளிவு படுத்திக் கொள்ள கேட்டவை. அவை அத்தனைக்கும் ஒரு சிறு தலையங்கத்திலோ ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள்ளோ பதில் விளக்கமாகத் தந்துவிட முடியாது.

கடிதங்களில் குறிப்பிட்ட ஒன்றிரண்டு கருத்துக்களுக்கு மட்டும் கொஞ்சம் பதிலாக விளக்கம் சொல்ல விரும்புகிறேன்.

'தர்க்கம்' என்ற சிறுகதை 'எழுத்து' பறைசாற்றிக் கொள்ளும் உயர்ந்த நோக்கங்களுக்கு ஈடு கொடுக்குமாறு அமையவில்லை.... ‘வெற்றியின் பண்பு' போன்ற சாதாரணப்பத்திரிகைக் கதைகளை

145