பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/164

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்


கவிகள் களைப் பின்றிக் காவியமியற்ற,
நின் கண்கள் என்ன நிலைக்காக கவர்ச்சியில்
கருமை தட்டியவை?
யுகம் யுகமாக மனிதனை மாயை போல மயக்க
உன் கருவளையும் கையும் என்ன கவிதையில்
கட்டழகு பெற்றவை?
உலகமே உணர்வழிந்து உள்ளங்கலங்க,
உன் இதழ்கள் என்ன சொற்சுவையில்
சுருதி சேர்ந்தவை?
மானிடன் மார்பில் ஒவ்வொரு அடியிலும் எதிரொலிக்க
உன்கால் மெட்டி என்ன வெள்ளி இசையில்
இன்பம் கட்டியது?
தெரியவில்லை; நீ சிரிக்கிறாய்!
தீக்குளியிலும் உனதழகு உயருகிறதோ?
சீதையைப் போல!
அழிவுகூட உன்னை அங்கம் அங்கமாக
அலங்கரித்து விடுகிறதோ?
உனதியற்கை உணர்ச்சிக் - கலையுடுத்தது
மொக்கின் மார்புபோல - அல்லவா?
துச்சாதனன் போல மனிதன்
உன் துகிலை உரிகிறான் -
பெண்ணியற்கையைப் பரிந்து காண!
பாஞ்சாலியின் புடவை போல அது
வளர்கிறது, வளர்கிறது, வளர்கிறது!
மனிதன், பேதை, மயங்கி விழுகிறான்.

எழுத்து ஐந்தாவது இதழில் திருச்சிற்றம் பலக்கவிராயர் (தொ.மு.சி.ரகுநாதன்) எழுதிய சோதனை கவிதை என்ற கவிதையும் எதிர்வரும் காலத்தில் எழுத்து புதுக்கவிதைக்கான இலக்கியக்களமாக மாறி விடும் என்பதைக் கூறாமல் கூறும் ஆரூடம் போன்ற கவிதையாகவே அமைந்திருக்கிறது.

157