பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/167

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

மற்றொன்று தனிப்பட்ட நூலாமுறைரையோ, நூலையோ எடுத்துக்கொண்டு ஆராய்வது.

......இலக்கிய விமர்சனத்துறையில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள்தான் இருக்கிறார்கள்; விமர்சனம் செய்வதற்குப் போதிய சூழ்நிலை இல்லை என்றெல்லாம் ஒரு தயக்கம் மேலோட்டமாக பரவி இருந்ததையும் போக்கும் ரீதியில் இன்று பலர்எழுத்து-மூலம் முன்வருகிறார்கள் இலக்கிய அபிப்பிராயம் சொல்ல.

இந்த இதழில் பழையவரானசுந்தரராஜன் (சிட்டி) எழுதியுள்ள ‘தமிழ் இலக்கியம்' விமர்சன அல்லது மதிப்புரைக் கட்டுரை குறிப்பிடத்தக்கது. விமர்சகர்களை விமர்சனம் செய்யும் அந்தக் கட்டுரை இதுவரை கூறப்பட்டுள்ள சில இலக்கிய அபிப்பிராயங்களுக்கு அறைகூவலாகவே அமைந்திருக்கிறது. அது ஆழ்ந்த கவனத்துக்கு உரியதாகும்.

அடுத்து புதியவரான டி.கே.துரைஸ்வாமி எழுதியுள்ள கட்டுரை ஒரு இலக்கியப் படைப்பை அணுகும் பல்வேறு முறைகளில், ஒரு முறையான சமூக ஆச்சார ரீதியில் இலக்கியப் படைப்பைப் பார்த்து, அந்த நோக்கின் விளைவாக அந்த நாவலில் தெரியவரும் நயங்களையும் தகவல்களையும் எடுத்துச்சொல்லும் வாக்காக அமைந்திருக்கிறது. இந்தக் கட்டுரை புதுவிதமானது.

அடுத்து 'எழுத்து' அரங்கத்தில் வெ.சாமிநாதன் எழுதியுள்ளது. ஒரு கதையை எடுத்துக்கொண்டு பகுப்பு முறையைக் கையாண்டு விண்டு பார்த்து தரம் அறியும் முறை'அது ஒரு படைப்பு இலக்கியத் தரமானதா என்று நிதானிப்பதற்கு இலக்கியத் தன்மைகள் அதில் உள்ளனவா என்று முதலில் பார்க்க வேண்டும்’ என்பதாக பிரிட்டிஷ் விமர்சகர் டி.எஸ்.எலியட் கூறிய மாதிரி 'நல்ல எழுத்து’ என்று அறிவதற்கு இந்த விதமான நுண்ணிய பார்வை அவசியம். எழுத்து வாசகர்களது இந்தப் பார்வைகள், இந்த ஆறாவது ஏட்டில் விழுந்திருப்பது, முறையான விமர்சன நோக்கு உருவாகிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது” - என்று அந்தத் தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் செல்லப்பா.

புதுக்கவிதை இயக்கமாகவே - பின்னர் மாறிவிட்ட எழுத்து - ஆரம்ப காலத்தில் தமிழில் விமர்சனக் கலையை உருவாக்கும்

160