பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/170

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

சோதனைகள் செய்து பார்த்தவர்கள் என்று கு.ப. ராஜகோபாலனையும் ந.பிச்சமூர்த்தியையும் சொல்லலாம்.

இந்த சோதனை அம்சம்தான் பிற்கால இலக்கியத்தின் வளர்ச்சியை சாத்தியமாக்குகிறது” என்று விளக்கமளித்திருக்கிறார்

க.நா.சு சுட்டிக்காட்டுகிற - புதுமாதிரியாகச் செய்த சோதனைக்காரன், வெற்றிகரமாகச் செய்த இலக்கியகர்த்தா ஆகிய இரண்டுபாத்திரங்களையும் சிறப்பாக வகித்து - எழுத்து பத்திரிகையில் நடத்திய இலக்கிய சோதனை முயற்சிகள் மூலம் சாதித்துக்காட்டியிருக்கிறார் செல்லப்பா.

'எழுத்து' 7ஆவது இதழ் புதுமைப்பித்தன் எழுத்துக்கள் என்ற தலைப்பில்-புதுமைப்பித்தனின் கதை, கவிதை, விமர்சனம், அவரது உரைநடை, அவர் செய்த புதுமைகள் ஆகியவைகளே நிறைந்த இதழாக வெளியிடப்பட்டிருக்கிறது.

கு.ப.ரா., வ.ரா, புதுமைப்பித்தன், பாரதி என்று வரிசையாக செல்லப்பா வெளியிட்ட சிறப்பிதழ்கள் அனைத்துமே பக்கங்கள் அளவில் பகட்டின்மை-பளபளப்பின்மை ஆகியவைகளின் அளவில் ‘ஏழைக்கேற்ற எள்ளுருண்டை'களாகத்தான் இருக்கின்றன. எனினும் ஒவ்வொரு சிறப்பிதழையுமே ஒரு சிறுநூலாகப் பதிப்பித்தால் அவை அனைத்துமே நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சியின் வரலாறுகளாகவே அமையும். எதிர்காலத்தில் இலக்கியம் படிக்க ஆர்வத்தோடு முன்வரக்கூடிய இலக்கியதாகம் மிகுந்த மாணவர்களுக்கு பாடப்புத்தகமாகவே பயன்படும்.

புதுமைப்பித்தனை புரட்சிப்படைப்பாளி என்றே பெருமைப் பொங்கிடக் குறிப்பிடுகிறார் செல்லப்பா.

புரட்சிப் படைப்பாளி - யார்?

"வளரும் இலக்கியம் சம்பந்தமாக குறிப்பிடத்தக்கது அதில் மேலும் சோதனைகளை - பிரக்ஞையுடனோ அல்லது தானறியாமலோ செய்து ஒரு புதுமையான விளைச்சலைக் காட்டியவனை புரட்சிப் படைப்பாளி என்று தான் கூற வேண்டும். 'புரட்சிக்காகப் புரட்சி' என்று இல்லாமல் - 'பழசைத்தாக்க வேண்டும், தகர்க்க வேண்டும்' என்ற ஒரு வெறியை மட்டும் தன்

163