பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—————————————————————————வல்லிக்கண்ணன்


“‘எழுத்து’ முதல் சந்தாதாரரான கோமல் சாமிநாதனும் இலக்கிய ரசிகரான திருப்பூர்சின்னசாமியும் முறையே மனம் நிறைந்து எழுத்துக்கு அளித்த பாராட்டு. ஆத்மாவும் உருவமும் மனிதப் பிறப்புக்கு இன்றியமையாததுபோல, கலை இலக்கியப் படைப்புகளுக்கும்தான். இந்த இலக்கியப்படைப்புகளுடன் உறவு கொள்ளும் 'எழுத்து' தன்ஆத்மாவையும் தோற்றத்தையும் புனிதமாக என்றைக்கும் வைத்துக்கொண்டு வாசக நம்பிக்கைகளை நிறைவேற்றுவதில் முனையும்.

அதற்கான ஊட்டத்தை எழுத்துக்கு கொடுப்பது வாசகர் கையில்தான் இருக்கிறது. அது 'எழுத்து'க்கு கிடைத்துக் கொண்டே இருக்கவேண்டும்” என்று வாசகர்களின் பெருமை பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

அந்த இரண்டாவது இதழிலேயே வாசகர்கள் சந்தாத்தொகையை அனுப்புவதற்கான ஒரு மாதிரிப் படிவத்தை சந்தாரசீது அளவில் ரோஜா நிறக்காகிதத்தில் அச்சிட்டு இணைத்திருக்கிறார்.

எழுத்து ஏடுகள் தவறாது கிடைக்க

எனக்கு எழுத்து .............................. மாத ஏடு

ஒரு ஆண்டுக்கு அரை ஆண்டுக்கு

.அனுப்பி வைக்கவும்

ஏடு முதல்

ஒரு ஆண்டு - ரூ.5.00 அரை ஆண்டு - ரூ. 2.50

மணியார்டர் மூலம் சந்தா அனுப்பி இருக்கிறேன்.

பெயர்........................................

விலாசம் ...............................

........................................

எழுத்து 19, ஏ. பிள்ளையார்கோயில்தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5.