பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/185

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

ஒன்றுக்குப் பார்த்தால் மற்றொன்றுக்கு சங்கடம்தான். பத்தாண்டுகள் மாத ஏடாகப் பார்த்தாயிற்று. இனிகாலாண்டு ஏடாகப் பார்ப்போமே என்ன செய்கிறது என்று!”

- என்பதாக 'எழுத்து' வை மாத ஏடாக நடத்த முடியாமல் காலாண்டு இதழாக நடத்த வேண்டியதற்குத் தன் மீதே பழிபோட்டுக் கொள்கிறார் செல்லப்பா. அப்போதும்கூட “வாசகர்கள் ஆதரவு எதிர்பார்த்தபடி இல்லை. தமிழகத்தில் நல்ல இலக்கியம் நல்ல விமர்சனம் ஆகியவைகளை ஆதரிப்போர்-அதற்காக மாதம் 50பைசா செலவிடக்கூடிய வாசகர்கள் ஒரு இரண்டாயிரம் பேர் கூட இல்லை என்று வாசகர்கள் மீது பழி போட அவருக்கு மனமில்லை என்பதையே “இலக்கியப் பத்திரிகை சம்பந்தமாக ஆரம்பத்திலேயே சரியாக மதிப்பிட எனக்குத் தெரிந்திருந்தால் அப்போதே நான் குவார்ட்டர்லியாகவே ஆரம்பித்திருப்பேன்"என்னும் அவரது சுயவிமர்சனம் காட்டுவதாக இருக்கிறது.

காலாண்டு இதழாக மாற்றப்பட்ட ‘எழுத்து’ எப்படி வரும், கடந்த 9 ஆண்டு கால எழுத்துவின் சாதனைகள் என்ன? வாசகர்கள் சுட்டிக்காட்டிய குறை என்ன? வாசகர்களுக்கு மதிப்பளித்து எழுத்து -எப்படிப்பட்ட மாற்றங்களைக் கொண்டதாக வெளிவரப்போகிறது? என்ற கேள்விகளுக்கும் இந்தத்தலையங்கத்தில் செல்லப்பாவிளக்கம் அளித்திருக்கிறார்.

“இப்படி ஒரு மறு ஆரம்பமாகத் தொடர்கிறபோது, அதாவது இன்னொரு கட்டத்துக்கு எழுத்து நகர்கிறபோது வளர்ந்தும் புதுசாகவும் இருக்க வேண்டும் என்ற நினைப்பு தோன்றுவது இயல்பே.

எழுத்து பற்றி - இந்தப் பத்தாண்டுக் காலத்தில் தற்காலப் புத்தகங்கள் பற்றிய மதிப்புரைகள் இல்லை. கதைகள் இல்லை. தமிழ்நாட்டில் சிறந்த எழுத்தாளர்கள் என்று அவர்களால் கருதப்படுபவர்கள் எழுதவில்லை. ஒரு சிலரைப்பற்றியே திரும்பத்திரும்ப மதிப்பிடப்படுகிறது. ஒரே குரலாக ஒலிக்கிறது. மாறுபட்ட கருத்துக்களுக்கு இடம் கொடுப்பதில்லை என்றெல்லாம் என் நேர் காதுக்கே வந்ததுண்டு. நான் எல்லாத்துக்கும் சமாதானம் சொல்லமுடியாது.

178