பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/189

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

குறைக்கப்பட்டிருக்கிறது. (அதே 40 பக்கம்) அதன்பிறகு 116ஆவது இதழும் அதே விலையில் 40 பக்கங்களுடன் வந்தது. 117ஆவது இதழின்பக்கங்கள் 32ஆகக் குறைந்தது118-119 ஆகிய கடைசி இரண்டு இதழ்களின் பக்கங்களோ மேலும் குறைந்து 24 பக்கம்தான் என்றாகிவிட்டது.

பனிரெண்டாம் ஆண்டு என்ற தலைப்போடு 1970 ஜனவரி மார்ச் என்று தேதியிடப்பட்ட 19ஆவது இதழோடு எழுத்து ஏட்டை செல்லப்பா நிறுத்திவிட்டார்.

பிடிவாதக்காரர் என்று எல்லோராலும் கணிக்கப்பட்ட செல்லப்பாஎன்ற எழுத்துப் போராளி-தமக்கே உரிய பிடிவாதத்துடன் “இப்படித்தான் எனது பத்திரிகைவரும்” என்று உயர்ந்த நோக்கம் - நெஞ்சுநிறைந்த ஆசை - தமிழ் மக்கள்மீது அளவுக்கதிகமாகக் கொண்டிருந்த நம்பிக்கை - எதிர்பார்ப்பு ஆகியவைகளையே கைமுதலாகக் கொண்டு நடத்திய ஒரு பத்திரிகை - தொடர்ந்து அவரால் நடத்தப்பட முடியாமல் நின்றுவிட்டது என்பது வருத்தத்துக்குரிய விஷயம் மட்டுமல்ல. முற்போக்கு, பிற்போக்கு, நல்லிலக்கியம் நச்சிலக்கிய, என்றெல்லாம் விண்முட்டப் பேசுகிற படைப்பாளிகள்-வாசகர்கள் எல்லோருமே வெட்கப்படவேண்டிய விஷயம்தான்.

செல்லப்பா நடத்திய எழுத்து வெளிவந்து கொண்டிருந்தபோது அதைப் பற்றிக் குறை கூறியவர்கள், குற்றஞ்சாட்டியவர்கள், கேலிபேசியவர்கள் எல்லாம் உண்டு.

எழுத்து - நிறுத்தப்பட்டு இன்று 32 வருடங்களாகிவிட்டன. இன்றும் செல்லப்பா போலவே உன்னத நோக்கங்களோடு இலட்சியப் பிடிப்புடன் பலர் சிறிற்தழ்களை நடத்தி வருகிறார்கள். இன்றும் அந்த சிறிற்தழ்கள் மீது செல்லப்பா காலம் போலவே குறைகள் கூறப்படுவதையும் குற்றச்சாட்டுகள் எழுவதையும் பார்க்கிறோம். சிற்றிதழ்களால் சிற்றிதழ்களை நடத்து வோரால் படைப்பாளிகளிடையே பலகோஷ்டிகள் உருவாகி விட்டன. முன்புபோல-நல்லதை இனம்கண்டு பாராட்டும் போக்கு இப்போது இல்லை. ஒரு கோஷ்டியைச் சேர்ந்த படைப்பாளிகள் - இன்னொரு கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் என்று தாங்கள் கருதும் படைப்பாளிகளைத் தாக்குகிறார்கள்; விமர்சனம் என்ற பெயரால்

182