பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/195

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா


நாவல் 'மோகமுள்' சுதேசமித்திரன் வாரப்பத்திரிகையில் வெளிவர ஆரம்பித்தது. அதுவரையில் தமிழில் வெளிவந்த அத்தனை நாவல்களிலிலும் இருந்து அது மாறுபட்டது; புதுவிதமானது சிறப்பானது. ஜானகி ராமன் வாராவாரம் வருவார். அவரிடம் நாவலைப் பற்றி ஆராய்வேன். நயம், குறை காட்டுவேன். அப்போது சுதேசமித்திரன் தீபாவளி மலர் வந்தது. அதன் பொறுப்பாக இருந்தவர் ரங்காச்சாரி என்பவர். அவரிடம் என்னைப் பற்றி ஜானகிராமன் சு.மி.மலருக்கு தமிழ்ச்சிறுகதை பற்றி எழுதகேட்கச் சொல்லி இருக்கிறார். அவர் கட்டுரை கேட்டார். எனக்கு வியப்பாக இருந்தது. எழுதினேன். என் முதல் கட்டுரை (1956). அதே மலரில் அப்போது திருவனந்தபுரத்தில் இருந்த க.நா.சு 'நாவல் இலக்கியம்’ என்ற தலைப்பில் எழுதி இருந்தார். இரண்டும் அநேகமாக ஒத்த பார்வையாக இருந்தது தற்செயலாக ஏற்பட்டது. இந்த இரண்டு கட்டுரைகளும் எங்களுக்கு ஒட்டிய அடுத்த தலைமுறை எழுத்தாளர்களான ஆர்.வி. (ஆர். வெங்கட்ராமன்), அகிலன் இருவருக்கும் ஆத்திரம் ஊட்டி விட்டது. முன்னவர் க.நா.சுவுக்கும் பின்னவர் எனக்கும் சூடாக பதில் கொடுத்திருந்தார்கள். அவர்களை தொடர்ந்து ர.பாலகிருஷ்ணன், ஜடாதரன் ஆகிய சுப்ரமண்யன் இரு வரும் அவர்களுக்கு ஒத்து ஊதியிருந்தார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த இருவருமே பி.எஸ். ராமையாவிடம் போய் இதுபற்றி பேச அவர் ஒரு கடிதமாக தன் அபிப்ராயத்தை எழுதிக் கொடுத்து வெளிவந்ததுதான். க.நா.சுவையும் என்னையும் (அதிகமாக என்னை) ராமையா வெளுத்துக்கட்டி இருந்ததுதான் விசேஷம். இன்னும் மூன்று நான்கு பேர்கலந்து கொண்டிருந்தார்கள். க.நா.சுவும் நானும் இவற்றுக்கெல்லாம் தக்க பதில் எழுதினோம். ரசமான விவகாரம். இந்த விவகாரம் என்னைத் தூண்டிவிட்டது. விமர்சனத் துறைக்குள் என்னைதள்ளி விட்டது. வெட்டி விவகாரம் போகட்டும் "உருப்படியாக ஏதாவது எழுத வேண்டும் என்று தோன்றியது" -என்கிறார் செல்லப்பா.

சரியாகச் சொல்வதானால் அந்த 1954 சுதேசமித்திரன் தீபாவளிமலர் செல்லப்பாவை மட்டும் இலக்கிய விமர்சனத் துறைக்குள் தள்ளி விடவில்லை. தமிழகத்தில் அன்றும் தேசிய நீரோட்ட எழுத்தாளர்கள் திராவிடர் இலக்கிய எழுத்தாளர்கள் தனித்தமிழ் இயக்கத்தார் முற்போக்கு எழுத்தாளர்கள் என்று பிரிந்து

188