பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/201

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா


யார் இப்படிச்சொல்வது? செல்லப்பாவா? வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷியா? இல்லை. சிற்பம் சிரக்கம்பம் செய்கிறது.

எனக்கு வாயடைத்துப் போய்க் கண்கலங்கி விட்டது. ஒ! செல்லப்பா எதிரில் உணர்ச்சி வசப்படுவதில் எனக்கு வெட்கம் கிடையாது. அவரைவிட நான் ஐந்து ஆறுவயது இளையவன்தான்.

செல்லப்பா, கனிவுடன் "என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நல்ல பண்டம் கிடைக்காதா என்று தேடிக் கொண்டேயிருக்கிறோம். கிடைத்தால் உங்களை விட சந்தோஷம் எங்களுக்குதான் அதிகம்.”

இந்த நாளில் இப்படி யாரேனும் சொல்வார்களா? மணிக்கொடி எழுத்தாளர்களின் விசேஷம் அதுதான். அதிலும் செல்லப்பா.

மேலும், ‘உங்கள் கதையை சுதேசமித்திரன் வார இதழில் விமர்சனம் செய்யலாம் என்றிருக்கிறேன்.”

ஏதேது, கொண்டைபோட்டு, மயில்ரக்கை சூட்டல் வேறா? அங்குமிங்குமாக துணுக்காக, ஒரு வரி இருவரியாக தினசரி பேப்பரிலோ, வாசகர் கடிதங்களிலோ பாராட்டு வந்தால் அதை ப்ரேம் போட வழியிருக்கிறதா என்று யோசிக்கும் நாள் அது. தொடர்ந்து அந்த ஒரு கதையை மூன்று வாரங்கள் விமர்சனம். என் கதையைப் படிப்பதைக்காட்டிலும் என்னைப் பற்றி படிக்க - என்ன ருசி!

- என்று கசப்போ கசப்பில் ஆரம்பித்த தமது அனுபவம் அடிக்கரும்பின்றாசிபோல இனிப்பில் முடிந்ததை உள்ளம் நெகிழ்ந்து எழுதியிருக்கிறார் லா.ச.ரா.

செல்லப்பா பிறரது கருத்துக்களை - படைப்புகளை மதிக்கத்தவறியவர் அல்ல. பாராட்டப்படக்கூடியவைகளை பளிச்சென்று - பாராட்டுவார், நல்லதைக் கண்ட மாத்திரத்தில்உடனடியாகப் பாராட்டுவார், யாரும் அதுபற்றிக் தம்மிடம் அபிப்ராயம் கேட்க வேண்டும் என்று காத்திருக்காமல் தேடிப்போய் பாராட்டுவார் என்பதற்கு லா.ச.ராவின் அனுபவம் ஒரு சாட்சியாகவே அமைந்திருக்கிறது.

194