பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/206

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

சி.சு. செல்லப்பா காந்தி யுகத்தின் அர்ப்பண உணர்வும் லட்சியப்பிடிவாதமும் வழிநடத்திய வாழ்வும் இவருடையது.

இவருடைய இலக்கிய முனைப்பு 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிறுகதை, நாவல், நாடகம்,கவிதை, விமர்சனம் என எழுத்தின் பல்வேறு தளங்களிலும் இவர் தன்னை முன்வைத்திருக்கிற போதிலும் காலத்துக்கும் இவருக்குமான உறவில் இவருடைய உயர்ந்த பங்களிப்பானது 11 ஆண்டுகால 'எழுத்து' இயக்கத்தின் மூலம் ஓர் எழுச்சியை உருவாக்கியதில்தான் தங்கியிருக்கிறது.”

-என்று குறிப்பிட்டிருக்கிற வயல் மோகன் எழுத்துவின் பாணி பாதை- பணிகள் - சாதனைகள் ஆகியவற்றையும் சுருக்கமாக கோடிட்டுக்காட்டியிருக்கிறார்.

“1959-ஆம் ஆண்டு ஜனவரியில் 'எழுத்து' முதல் இதழ் வெளிவருகிறது. தற்காலத் தமிழிலக்கியத்தில் மறுமலர்ச்சியும் செல்லப்பாவின் இலக்கிய வாழ்வில் புத்தெழுச்சியும் நிகழ்கிறது.

க.நா.சுவின் ஆசிரியப் பொறுப்பில் இரண்டாண்டுகள் (1945-47) வெளிவந்த 'சந்திரோதயம்' இதழில் இணைந்து செல்லப்பா பணியாற்றியபோது க.நா.சுவின் பாதிப்பில் செல்லப்பாவுக்கு விமர்சன ஈடுபாடு ஏற்பட்டது. நாளடைவில் அது வளர்ந்து தமிழ்ச்சூழலில் விமர்சனத்தின் தேவையை வெகுவாக உணர்ந்ததில் விமர்சனத்துக்கென்றே செல்லப்பா உருவாக்கிய இதழ்தான் 'எழுத்து’

க.நா.சுவிடமிருந்து விமர்சன ஆர்வத்தைப் பெற்றபோதிலும் க.நா.சுவின் ரசனைவழி தரநிர்ணய விமர்சன முறையை செல்லப்பா நிராகரித்தார். ஆங்கில விமர்சன நூல்களை தீவிரமாக வாசித்த இவர், படைப்பின் மேன்மையை முன்வைக்க பகுப்பாய்வு முறையே உகந்தது என்று அதை மேற்கொண்டார். 'எழுத்து'வில் செல்லப்பா அதிகமும் விமர்சனக் கட்டுரைகளே எழுதினார்.

விமர்சனத்துக்கென்று 'எழுத்து' தொடங்கப்பட்ட போதிலும் தற்செயல் நிகழ்வாக புதுக்கவிதை ஊடகத்திற்கான தளமாகவும் அது அமைந்தது. புதுக்கவிதைகளும் புதுக்கவிதை பற்றிய கட்டுரைகளும் இடம் பெறலாயின. தமிழ் இலக்கியப் பரப்பில் புதுக்கவிதை அலை எழுந்தது.அலைவீச்சின்தொடக்கத்திலேயே புதுக்கவிதையின் சிறந்த படைப்புகள் வெளிவரத்தொடங்கின. தர்மு, சிவராமு,

199