பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/213

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா



முதல் வருடத்தில் ந.பி. கவிதைகள் மூன்றே மூன்று தான் (பெட்டிக்கடை நாரணன், விஞ்ஞானி, கலீல் கிப்ரான்தமிழாக்கமான ‘ஜீவா! தயவுகாட்டு') பிரசுரமாயின் 1,2,3 ஏடுகளில்.

‘எழுத்து முதல் ஐந்து ஏடுகளில் க.நா.சுப்ரமண்யம் கட்டுரைகளும் கருத்துக்களும் மிக அதிகமாக இடம் பெற்றிருந்ததைப் போலவே, முதல் வருடத்தில் (ஏழு ஏடுகளில்)அவரது கவிதைகளும் அதிகமாகப் பிரசுரமாகியிருந்தன.

க.நா.சு. சோதனை முயற்சிகள் என்றே கவிதைகள் எழுதினார் என்பதற்கு அவருடைய வரிகளையே எடுத்தெழுதுவதுதான் நல்லது.

‘கவிதையில் நான் செய்ய முயற்சித்ததெல்லாம், விஷயத்தையும் வார்த்தைகளையும் உள்ளத்து உண்மையிலே குழைத்து, காதும் நாக்கும் சொல்லுகிற கட்டுப்பாடுகளுக்கும் கண் தருகிற கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு எழுதுவது என்கிற காரியம்தான்; இன்றைய உண்மையை நிரந்தரமாக்குகிற காரியம்தான், இன்றைய என் அனுபவத்தை வார்த்தைகளால், பேசும் சந்தத்தில் இலக்கியமாக்க, கவிதையாக்க முயலுகிறேன். பயன், கழுதையா, குதிரையா, வசனமா, கவிதையா, இலக்கியமா, பிதற்றலா என்று கேலி செய்பவர் இருக்கலாம். சோதனை என்று சொல்லும் போது இதற்கெல்லாம் பயப்பட்டுக் கட்டாது. இலக்கிய சோதனைகள் பலவும் ஆரம்பத்தில் கேலிக்கிடமாகவே தான் காட்சியளித்துள்ளன.

‘என் புதுக் கவிதை முயற்சிகள் கவிதையாகவும் இலக்கியமாகவும் உருவெடுக்க, வாசகர்கள் ரசிகர்கள் உள்ளத்தில் எதிரொலித்துப் பயன்தரப் பல காலமாகலாம் என்பதையும் அறிந்தே நான் இந்தக் கவிதைச் சோதனையைச் செய்து பார்க்கிறேன். நம்முடைய இன்றைய தினசரி வாழ்விலே இடம் பெறுகிற விஷயங்கள் எல்லாமே, உவமைகள், உருவகங்கள், ஏக்கங்கள், ஆசைகள், வார்த்தைகள், மெளனம் எல்லாமே, என் கவிதைக்கு விஷயம். வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாக இருப்பது போலவே என் கவிதையும் சிக்கலும் சிடுக்கும் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. தெளிவு தொனிக்க வேண்டும்; ஆனால் சிக்கல் விடுவிக்கக் கூடாததாகவும் இருக்க வேண்டும். கவிதை நயம் எது என்று எடுத்துச் சொல்லக் கூடாததாக இருக்க வேண்டும் - அதே

206