பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/214

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

சமயம் பூராவும் புரியாமலும் இருந்துவிடக் கூடாது. திரும்பத் திரும்பப் படித்துப் பார்க்க, ஒருதரம் படிப்பவருக்கும் ஒரு எதிரொலிக்கும் தன்மை, விடாப்பிடியாக உள்ளத்தைப் பிடித்துத் கொள்ளும் ஒரு குணம் இருக்க வேண்டும் இந்தப் புதுக்கவிதையிலே என்றுதான் எண்ணுகிறேன்.” -

('சரஸ்வதி மலர் - புதுக்கவிதை கட்டுரை)

க.நா.சு.வின் ‘கவிதை’ எனும் கவிதையை படித்துப் பாருங்களேன்!

எனக்கும்
கவிதை பிடிக்காது.
மனிதன் எத்தனையோ
எட்டுக்கள் எடுத்து வைத்து விட்டான்;
இவற்றில்
எத்தனை எட்டுக்கள் கவிதையால்
சாத்திய மாயின
என்று யார்

தீர்மானித்துச்சொல்ல இயலும்? பின்
எதற்காகத் தான் கவிதை தோன்றுகிறது?
மொழியின் மழலை அழகுதான்.
ஆனால் அது போதவே
போதாது.

போதுமானால் கவிதையைத் தவிரவேறு
இலக்கியம் தோன்றியிராதே, போதாது
என்றுதான்,ஒன்றன் பின் ஒன்றாக
இத்தனை இலக்கியத்
துறைகள்
தோன்றின, நாடகமும், நாவலும், நீள்
கதையும், கட்டுரையும் இல்லாவிட்டால்
தோன்றியிராது; ஆனால் அவையும் தான்
திருப்தி தருவதில்லையே!

207