பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/227

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா



இந்த இசைத்தன்மைதான் கவிதையை வசனத்திலிருந்து பிரித்துக் காட்டுகிறது. ஆனால் இசைத்தன்மை என்பதை மிகுந்த எச்சரிக்கையுடனேயே கவிதைத் துறையில் குறிப்பிட வேண்டும். சங்கீதத்துக்கு உரிய அளவு தேவையான இசைத் தன்மைக்கும் கவிதைக்கு உரிய அளவு தேவையான இசைத் தன்மைக்கும் உள்ள வித்தியாசத்தை எந்த சந்தர்ப்பத்திலும் நாம் அசந்து மறந்துகூட - குழப்பிக் கொள்ளக்கூடாது. வசனத்துக்கும் கவிதைக்கும் உள்ள வித்தியாசத்தைப்பேர்லவே கவிதைக்கும் சங்கீதத்துக்கும் வித்தியாசம் உண்டு. பாரதி தன் கவிதைகள் பலவற்றில் சங்கீதத்துக்கு உரிய இசையம்சம் ஏற்றியிருப்பதைப் பார்க்கலாம். இந்த அளவு இசையம்சம் உள்ள அவரது படைப்புகள் கவித்தரம் குறைந்துதான் காண்கின்றன என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும், இன்று அவரது அத்தகைய படைப்புகளைப் பின்பற்றி எழுதப்படும் மெட்டுப்பாட்டுகள் எல்லாம் கவிதைகள் என்று கருதும் ஒரு ஏற்பு நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலை கவிதை வளர்ச்சிக்குப் பெரிதும் பாதகமாக இருக்கக் கூடியது.

எனவே கவிதைக்கு வேண்டிய இசைத்தன்மை பிச்சமூர்த்தி கூறியதுபோல 'சவுக்கைத் தோப்பின் வழியே காற்று பாய்ந்து சென்ற பிறகு தோன்றும் ஒரு ஒயுமொலி' என்பதுதான் முக்கியம். ஒயுமொலி சொப்பனக் குரல் மாதிரி நம் காதுகளில் தாக்கக்கூடியதாக இருக்கவேண்டும். இந்த ஒயும் ஒலி சொப்பனக் குரல்தான் ஒலிநயம் என்று சொல்கிறோமே அந்த மென்மையான இசைத்தன்மை வாய்ந்தது. இந்த ஒலிநயம் சுருதி மீட்டலாக ஒடும் கவிதையில் வசனத்திற்கும் ஒலிநயம் உறவு உண்டு என்றாலும் கவிதையில் உள்ள ஒலிநயத் தோற்றமே வேறு. இந்த ஒலிநயத்தை கொணர்வதில்தான் கவிஞன்சாமர்த்தியம் இருக்கிறது. சந்தத்தைக் கொண்டு வார்த்தைகள் ஒசையை தாளப்படுத்திக் காட்டி கவிதையை உணரச் செய்வதுதான் என்பதல்ல.

இந்த மென்மையான ஒலிநயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுதான் புதுக்கவிதை முயற்சி. சந்தஅமைப்பு ஒழுங்கற்று கையாளப்பட்டிருக்கலாம். அதைப் பற்றிய அக்கறை இல்லாமலும் இருக்கலாம். ஆனால் ஒலிநயம் அதில் இருக்கத் தான் செய்யும். இதனால் மரபான கவிதையில் ஒலிநயம் இல்லை என்று

220