பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/231

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா



கருமை தட்டியவை?
யுகம் யுகமாக மனிதனை
மாயை போல மயக்க
உன் கருவளையும் கையும்
என்ன சொற்சுவையில்
சுருதி சேர்ந்தவை?
மானிடன் மார்பில்
ஒவ்வொரு அடியிலும் எதிரொலிக்க
உன் கால் மெட்டி
என்ன வெள்ளி இசையில்
இன்பம் காட்டியது?

இந்தச் செய்யுளுடன் பாரதியின்காட்சிகளில் உள்ளவரிகளை ஒப்பிட்டுப் பார்த்தால் புதுக் கவிதைக்கும் வசன கவிதைக்கும் பல அம்சங்களில் உள்ள வித்தியாசம் தெரியும். பாரதியின் காட்சி வரிகளில் வரும் சொற்கள் 'சிருஷ்டியின் அனுபவத்தைக் கூறும் உணர்வுள்ள சொற்களாக' இருக்கலாம். ஆனால் அவைகளின் சேர்க்கையிலே இசைத்தன்மை பிறக்கவில்லை. ஆனால் கு.ப.ரா.வின் கவிதைகளில் வரும் சொற்களும் சொற்கோவைகளும் தங்கள் கருத்து, உணர்வு இசையினால் மட்டுமின்றித் தங்கள் ஒலி இசைவினாலும் சிறப்பாக-முதன்மையாக கவிதை ரூபத்திற்கு உதவி இருக்கின்றன.

புதுக் கவிதை சத்தான தாக்கான முயற்சி. அதன் எதிர்காலம், பழங்கவிதையின் இயல்பும் சிறப்பும் அறிந்து மரபை மீறி மரபு அமைக்கும் வழியாக கவிதை உள்ளம் படைத்தவர்கள் கையாளும் வழிவகைகளைப் பொறுத்து இருக்கிறது.”

224