பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/233

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா



வேலிகட்டா வானத்தில்
வெள்ளிப் பயிர் வளர்க்க
தாலிகட்டிச் சக்தியினை
ஈர்ப்பென்ற நீர்பாய்ச்சிக்
காலமெல்லாம் காத்திருக்க
வைத்துவிட்டாய்; வைத்துமென்ன?
ஊழியென்ற பட்சி அவள்
அயர்ந்திருக்கும் வேளையிலே
வேலிகட்டா வானத்தில்
வெள்ளி விதைகளெல்லாம்
அள்ளி விழுங்கும்வரை
நீர்பாய்ச்சி என்ன பயன்
வேர்முளைக்கக் காணோமே!

முதல் வருடத்தில் கவிதை எழுதத் தொடங்கிய கி.கஸ்தூரி ரங்கன் கற்பனைப் பெண் என்ற இனிய கவிதை ஒன்றே ஒன்றை மட்டும் எழுதியதுடன் நிறுத்திக்கொண்டார். அது ரசிக்கப்பட வேண்டிய படைப்பு.


மஞ்சம் ஒழிந் திருக்கப்
பஞ்சணைகள் பூத்திருக்க
கன்னம் செவ செவக்கக்
கற்பனையே,பெண்ணே
நீ
நெஞ்சில் துயிலுவதேன் - என்
நெஞ்சில் துயிலுவதேன்?
உதயம் ஒளித்திசையில்
உருவாவ தறியாமல்
இதயம் துடித்திசைக்கும்
இன்பத்தா லாட்டுக்களில்
கதையாம் கவிதைகளாம்
கனவுகளாகக் கண்டுகொண்டு
கண்ணில் உறங்குவதேன் - என்
கண்ணில் உறங்குவதேன்?

நெஞ்சோ முட்படுக்கை - என்
கண்ணோ கனலிருக்கை!

226