பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/242

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்



சாய்ந்ததும் செரித்திடுவாள்; அபூர்வமாய் பெற்ற மகனாய் நீ வளர்த்த நாயும் கடிக்கும்; நோய் பிடிக்க கடனேற நீயே உனக்கு எதிராவாய்; கதவை மூடு, கதவை மூடு.

நகையாய் வெறுத்த உடை நலிந்ததும் கூடையிலே; பூவையர் சூழல் பூச்சரம் வாடியதும் குப்பையிலே

விளங்க வந்த மனைவிளக்கு மாத முடிவில் மூலையிலே; வானுக்கு உயிரூட்டி சிரித்தேகும் எரிகல் உதிர்ந்ததும் ஒன்றுமில்லை காற்றேன்? மூச்சேன்?

கதவை மூடு,கதவை மூடு.

கவிஞர்கள் நிலவை எவ்வாறெல்லாமோ வர்ணித்து விட்டார்கள். இன்னும் பாடிக்கொண்டிருக்கிறார்கள். என்றாலும், நிலவை ரசிப்பதிலும் வியந்து பாராட்டுவதிலும் மனித மனசுக்கு அலுப்பு ஏற்படும் என்று தோன்றவில்லை.

நிலவை புதியதோர் கோணத்தில் பார்த்து (புதுக்) கவிதை செய்தார் எஸ். வைதீஸ்வரன். அருமையான படைப்பு.

'எழுத்து'வில் வந்த அவருடைய முதல் கவிதை இதுதான். 34-35 என்று இரட்டை இலக்கமிட்ட ஏட்டில் பிரசுரமாயிற்று.

கிணற்றில் விழுந்த நிலவு

கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கி விடு
நனைந்த அவள் உடலை நழுவாமல் தூக்கி விடு
மணக்கும் அவள் உடலை மணல் மீது தோய விடு நடுங்கும் ஒளியுடலை நாணல் கொண்டு போர்த்தி விடு

235