பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/249

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா



ரேடியோவை பாடவிட்டு, அதில் எழுந்த சங்கீதம் பிடிக்காததால் படீரென அதை நிறுத்திய செயலுக்கு அழகான ஒரு உவமை

‘திடுமென் றோராண் வரவே
வாரிச் சுருட்டும் மரபு
வளர்த்த வொரு மங்கையென
விரைந்தே யணைத்து விட்டு
பேயறைந்த நிலையில் வெறிக்க’

இப்படி நயங்கள் பல கொண்டது ‘நரகம்’.

‘தமிழகம் கீழுமல்ல
முழுதும் மேலுமல்ல;
உலையேற்றி விட்டு
சோறாக்க மறியல்;
பட்டினியும் அழிவுமே
கிடைத்த பயன்;
பின்னாலும் போகவில்லை
முன்னாலும் நடக்கவில்லை;
நடுக்கிணற்றில் நிகழ்காலம்’

என்று நாட்டின் நிலையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில்.

கே. அய்யப்ப பணிக்கர் கேரளத்தில் கவிதை உலகில் தனி இடம் பெற்றவர். அவருடைய படைப்புகளில் சிறந்ததான ‘ருஷேத்திரம்’ எனும் நெடும் கவிதையை நகுலன் மலையாளத்திலிருந்து தமிழாக்கினார். அது ‘எழுத்து’ 48-வது இதழில் வந்தது.

1962-ன் பெரிய சாதனை பிச்சமூர்த்தி கவிதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘எழுத்து பிரசுரம்’ ஆகப் பிரசுரித்ததும், புதுக் குரல்கள் தொகுப்பை தயாரித்து வெளியிட்டதும் ஆகும்.

ந.பி. 1938 முதல் 1962 முடிய எழுதிய கவிதைகளில், தேர்ந்தெடுத்த 35 கவிதைகள் கொண்ட தொகுப்பு ‘காட்டு வாத்து’.

அதன் முன்னுரையில் - ‘எதிர்நீச்சு’ என்ற தலைப்பில் - பிச்சமூர்த்தி எழுதியுள்ள கருத்துக்கள் இவை

242