பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/252

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

இருட்டடிப்புகள் என் தெரிவுக்கு குந்தகம் விளைவித்திருக்கவும் கூடும்” என்று சி.சு.செல்லப்பா, இத்தொகுப்புக்கு உரிய கவிதைகள் தேர்ந்து எடுக்கப்பட்ட விதம் பற்றி, முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய நேர்மை பாராட்டப்பட வேண்டிய பண்பு ஆகும்.

செல்லப்பா இத்தொகுப்புக்கு எழுதிய முன்னுரை ('நுழைவாசல்') நல்ல ஆய்வுரையாக அமைந்துள்ளது.

உலக இலக்கியத்தில் புதுக்கவிதையின் தோற்றம் குறித்தும், கவிதையின் தன்மை பற்றியும் இம் முன்னுரையில் கூறப்பட்டுள்ளவை கவனத்துக்கு உரியன.

"மேற்கே இந்த புதுக்கவிதை பிறந்ததைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது லாபகரமானது. எந்த ஒரு கவியும் தன் காலத்தில் பிறந்தவன் தான் என்றாலும் அதுக்கும் மீறி எழுத்து அடிப்படைகளை, பேருண்மைகளை வ.வே.சு. அய்யர் குறிப்பிட்டிருப்பது போல அகண்டப்பொருளின் சாயைகளை காட்டுபவனாக என்றைக்குமாக நிற்பவன். இருந்தாலும் ஒரு காலத்துக் கவி இதயம் பற்றிக்கொண்ட அம்சங்களை அடுத்த கால கவி இதயம் வாங்கிக் கொள்கிறதில்லை; முடிகிறதில்லை. மதிப்பு என்று சொல்கிறோமே அது தலைமுறைக்குத் தலைமுறை வித்தியாசப்படுகிறது. அடிப்படை மாறாமல், மேல் மாற்றங்களாக, முகச்சாயல் மாறுதல்களாக ஏற்பட்டு வருவது தெரிந்தது. அபூர்வமாக அடிப்படையை தொட்டாலும் அடிப்படை வெள்ளத்துக்கு முன் நாணலாக வளைந்து கொடுத்து நிமிர்ந்து விடுகிறது. இந்த முகச்சாயல் மாறுதல்களில் உலுக்கல்கள் எந்த நாட்டு இலக்கியத்திலும் ஏற்படாமல் இல்லை. கிளாஸிஸம், ரொமாண்டிஸிஸம், ரியலிஸம் இப்படி கவியின் மனப்பாங்கிலே, உள்ளடக்கத்திலே அனுபவ வெளியீட்டிலே மாறி வந்திருக்கின்றன.

இந்த மாறுதல்களில் ஒன்றாக, 1910க்கு மேல் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் உள்ள கவிகள் சிலர் சேர்ந்து, கவிதைப் புனருத்தாரணத்தை குறிக்கோளாக கொண்டு இமேஜிஸ்ட்கள் என்ற கோஷ்டி உருவாகிறது. பிரெஞ்சு இலக்கியத்தைப் பின்பற்றி வெர்ஸ் லிப்ரெ என்ற சுயேச்சா கவிதை முறையின் சாத்தியங்களை ஆராய்வதில் அக்கறை காட்டினார்கள். சொல் சிக்கனம்,சகஜத்

245