பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/262

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்



எனக்கோ
கடவுள் அளித்த ரஜா.
மரணவூரில்
ஆஜராகி வேலை ஏற்க
யான் பெற்ற
காலாவதி

மணியின் முள்ளில் காலமில்லை
அக்கினியைத் தேடி
அலைந்த மனசோ
அடுப்பாய்ப் புகையுது.

பிச்சமூர்த்தி எழுதிய ‘வழித்துணை’ எனும் நெடுங்கவிதை 53 வது ஏட்டில் பிரசுரமாயிற்று. ‘புதுக்கவிதையில் இன்னொரு மைல்கல்’ என்று இதை வரவேற்று எழுத்து அதே இதழில் தலையங்கம் தீட்டியுள்ளது. அறிவு வார்ப்பான புதுரகப் படைப்பு என்று சி.கனகசபாபதி இதை விவரித்தும் விமர்சித்தும்தனிக்கட்டுரை எழுதினார். (எழுத்து 5)

பிஷுவின் 1960 காலக் கவிதைகளை இரண்டாவது கட்டக் கவிதைகள்' என்று மொத்தமாக, தனியாக ஆராய வேண்டும் என, அவரது ‘முதல் கட்டக் கவிதைகள், (1934 - 1964) பற்றி எழுதியபோதே குறிப்பிட்டிருக்கிறேன். ஆகவே, ந.பி.யின் கவிதைகள் பற்றிய என்எண்ணங்களை இத்தொடரில் அங்கங்கே நான் குறிப்பிடவில்லை. 'வழித்துணை' பற்றியும் அப்படியே.

புதிதாகத் கவிதை எழுத முற்பட்டவர்களில், நா. வெங்கட் ராமன் புதிய எண்ணங்களை தம் படைப்புகளில் கொண்டுவர முயன்று வெற்றியும் பெற்றுள்ளார். இயற்கைக் காட்சிகளோடு விஞ்ஞான உண்மைகளையும் கவிதைப் பொருளாக்க வேண்டும் எனும் புதுக் கவிஞர்களின் துடிப்பு அவருக்கு உண்டு என்பதை அவரது படைப்புகள் காட்டுகின்றன. 'பிரசவம்’ என்ற கவிதையை ஒரு உதாரணமாகக் கூறலாம்.

ரவிக் கையின் சூடு
கடல்நீரைப் புகையாக்கி விண்ணேற்ற
காற்றோட்ட,
மலைமறிக்க

255